Back to Top

கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த ராகுல் டிராவிட் மகன்!

கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த ராகுல் டிராவிட் மகன்!

January 11, 2018  09:50 am

Bookmark and Share
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பாடசாலைகளுக்கு இடையிலான 14-வயதுக்குட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் விவேகானந்தா பாடசாலையும், மல்லையா அதிதி சர்வதேச பாடசாலையும் மோதின.

இதில் மல்லையா அதிதி சர்வதேச பாடசாலை அணியில் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட் மகன் சமித்தும் (12), சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் இடம்பெற்றிருந்தனர்.

ராகுல் டிராவிட் தற்போது 19-வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சுனில் ஜோஷி, பங்காளதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மல்லையா அதிதி சர்வதேச பாடசாலை அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 500 ஓட்டங்கள் எடுத்தது. ராகுல் டிராவிட்டின் மகன் சமித் அதிரடியாக விளையாடி 150 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். அதே சமயம் மற்றொரு சக அணி வீரரான சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷி அடித்த 154 ஓட்டங்களே அந்த அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக அமைந்தது.

தொடர்ந்து விளையாடிய விவேகானந்தா பாடசாலை அணி எதிரணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 88 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மல்லையா அதிதி சர்வதேச பாடசாலை அணி, 412 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

சமித் இதற்கு முன்னரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த 14-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியிலும் அவர் 125 ஓட்டங்கள் அடித்துள்ளார். மேலும், 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 12-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் மூன்று அரைசதம் (77*, 93, 77) அடித்து அசத்தினார். அப்போது அவருக்கு 9 வயது தான் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.