Back to Top

மியான்மரில் 6.0 ரிக்டர் -  ஈரானில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்!

மியான்மரில் 6.0 ரிக்டர் - ஈரானில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்!

January 12, 2018  09:41 am

Bookmark and Share
மியான்மர் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது.

மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை ரங்கூனில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதேவேளை, ஈரானின் தெற்கில் அமைந்துள்ள கெர்மான் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து தெற்கு திசையில் சுமார் 700 கி.மி. தொலைவில் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள ஹொஜெட்க் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நேற்று மாலை மிலன் பகுதியில் 4.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த நவம்பர் 12-ம் திகதி மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Viewed