Back to Top

ஷிடேனின் பதவிக்காலம் 2020 வரை நீட்டிப்பு

ஷிடேனின் பதவிக்காலம் 2020 வரை நீட்டிப்பு

January 12, 2018  09:45 am

Bookmark and Share
ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஷிடேனின் ஷிடேன். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பார்சிலோனா அணிக்கெதிரான போட்டியில் தனது சொந்த மைதானத்தில் 0-4 என ரியல் மாட்ரிட் தோல்வியடைந்ததால் ரபெல் பெனிடெஸ் நீக்கப்பட்டு ஷிடேன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஷிடேன் தலைமையில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது. ஷிடேன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பின் ரியல் மாட்ரிட் 10-ல் 6 கிண்ணத்தை வென்றுள்ளது.

2017-ல் ரியல் மாட்ரிட் லா லிகா, சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை கைப்பற்றி அசத்தியது. ஆனால் தற்போது 2017-18 சீசனில் ரியல் மாட்ரிட் அணியின் ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. இந்த லா லிகா சீசனில் பார்சிலோனாவிற்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் 0-3 எனத் தோல்வியடைந்ததுடன், 16 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இதனால் ஷினேடின் ஷிடேன் ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று ஷிடேனின் ஷிடேன் ஒப்பந்தத்தை ரியல் மாட்ரிட் அணி 2020 நீட்டித்துள்ளது.