Back to Top

'வெகுமதிகளின் பருவகாலம்' ஊக்குவிப்பினை முன்னெடுக்கின்ற DFCC வங்கி

'வெகுமதிகளின் பருவகாலம்' ஊக்குவிப்பினை முன்னெடுக்கின்ற DFCC வங்கி

January 12, 2018  10:55 am

Bookmark and Share
நாட்டிலுள்ள பிரஜைகள் மத்தியில் சேமிப்பு பழக்க வழக்கத்தினை உட்புகுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயலாற்றும் DFCC வங்கியானது, புத்தாண்டில் மற்றுமொரு வியத்தகு ஊக்குவிப்பினை வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ´DFCC வெகுமதிகளின் பருவகாலம்´ (‘DFCC Season of Gifts’) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஊக்குவிப்பானது, பாதுகாப்பான நிதி எதிர்காலம் ஒன்றினை கட்டமைத்துக்கொள்ளும் வகையில் DFCC வங்கியுடன் கணக்கொன்றினை ஆரம்பிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு ஊக்கமளிக்கின்றது.

பிள்ளைகளின் கல்விசார்ந்த எதிர்காலத்தினை இலக்காக கொண்டு வங்கியானது, ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் வர்தன ஜூனியர் கணக்கினை ஆரம்பித்தவர்களுக்கு ரூ. 2500 பெறுமதியான பணவவுச்சர் மற்றும் பாடசாலைப் பொருட்கள் தொகுதி ஒன்றினை அளித்தது.

அது மட்டுமன்றி வங்கியானது, பெரியவர்களுக்கான சேமிப்பு மீது அதியுயர் வட்டி வீதத்தினை அளித்ததுடன், இலவச ஆயுள் மற்றும் மருத்துவமனைக் காப்பீடு ஆகியவற்றினை அளித்தது.

இதன் மூலம் கணக்கு உரிமையாளர்களின் நிதிப் பொறுப்பு குறைக்கப்படுவதுடன், மேலதிகமாக காப்புறுதிக் காப்பீடு ஒன்றினை மேற்கொள்ளவேண்டிய தேவையினையும் இல்லாதொழிக்கின்றது.

தமது வாழ்வினை முழுமையாக அனுபவிப்பதனை தொடர்வதற்கு வழிவகுக்கும் வகையில், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கணக்கினை 2018 ஜனவரி மாதத்தில் ஆரம்பிப்பவர்களுக்கும் விசேட பரிசு வவுச்சர்கள் அளிக்கப்படுகின்றது.

சேமிப்பின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், வெகுமதிகளின் பருவகாலம் ஊக்குவிப்பு நடைபெறும் காலப்பகுதியில் ,ரூ. 2500 மற்றும் அதற்கு மேலான தொகையினை வைப்பு செய்யும் வாடிக்கையாளர்கள், வங்கிக் கிளைகளில் அமைந்துள்ள அதிஷ்ட சக்கரத்தினை சுழற்றுவதன் ஊடாக, உடனடியாக பெறுமதிமிக்க வெகுமதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து கருத்துரைத்த DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஷ்மன் சில்வா அவர்கள் ´இந்த புதுவருடத்தில் DFCC வங்கியானது, சேமிப்பு பழக்கத்தினை முழுக்குடும்பத்திலும் உட்படுத்துவதை வருடம் முழுவதற்குமான இலக்காக கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் DFCC வங்கியுடன் பங்குடமை வைத்திருப்பதன் ஊடாக, முழுக்குடும்பமுமே, தமது சேமிப்பினை தனித்துவமிக்க செயலாக்கத்துடன் அதிகரிப்பதற்கான வழியினை அளிக்கின்றது.

அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளிலும் மேலதிக அனுகூலங்கள் அளித்தலை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். DFCC இன் ´வெகுமதிகளின் பருவகாலம்´ ஊக்குவிப்பானது, DFCC கிளையொன்றுக்கு முழுக்குடும்பமும் விசேட சலுகைகளை பெற்றுக்கொள்தலை ஊக்குவிக்கின்றது.

அறுபது வருடங்களுக்கும் மேலான நிதி நிபுணத்துவத்தினை கொண்டுள்ள நிதி நிறுவனம் என்ற வகையில் DFCC வங்கியானது, சேமிப்பு பழக்க வழக்கத்தினை ஊக்குவிப்பதன் ஊடாக, புத்தாண்டினை சிறந்ததொரு பழக்கத்துடன் ஆரம்பித்தலுக்கு சகாயமளிக்கின்றது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் ஸ்திரமான சேமிப்பு பழக்கவழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் DFCC வங்கியின் இந்த புதிய ஊக்குவிப்பு வெகுமதிகள் குடும்பத்திலுள்ள அனைத்து அங்கத்தவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ,சந்தோஷமிகு செயற்பாடாக அமையும் என்றால் மிகையில்லை.

DFCC வங்கியானது, தடையற்ற பன்முக வங்கியியல் தீர்வுகளை அளித்தவாறு செயலாற்றும் முழுமையானதொரு வர்த்தக வங்கியாகும்.

வங்கியானது, நாடளாவிய ரீதியில் 138 சேவை நிலையங்கள் மற்றும் கிளைகளுடன் தமது வலையமைப்பினை விஸ்தரித்தவாறு துரித வளர்ச்சியினை பெற்று வருகின்றது.

LankaPay பொது ATM Switch இனால் இணைக்கப்பட்டுள்ள DFCC வங்கி வாடிக்கையாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள 4000 ATM களுக்கான அணுக்கத்தினை கொண்டுள்ளனர்.

DFCC வங்கியானது, Fitch தரப்படுத்தலில் AA-(lka) தரத்தினையும் பெற்றுள்ளது.