Back to Top

60 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளை கொண்டுவந்த இந்தியப் பிரஜை கைது

60 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளை கொண்டுவந்த இந்தியப் பிரஜை கைது

January 12, 2018  11:05 am

Bookmark and Share
ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற ஒருவகை போதைப் பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9.45 மணிளவில் சென்னையில் இருந்து வந்த இந்தியப் பிரஜை ஒருவர் விமான நிலைய போதை தடுப்பு பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தமிழகத்தை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய பயணப் பொதியில் இருந்து இந்தப் போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 60 இலட்சம் என்று பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.

சந்தேகநபர் இன்றையதினம் மினுவாங்கடெ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட உள்ளதுடன், மேலதிகள விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதிகளுக்கு விநியோகம் செய்வதற்காக இவை கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.