Back to Top

சேவல் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஐ.தே. க உடன் இணைவு

சேவல் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஐ.தே. க உடன் இணைவு

January 12, 2018  11:27 am

Bookmark and Share
கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனியான்டி கயானி என்ற பெண் வேட்பாளர் தனது ஆதவராளர்களுடன் ஐ.தே.கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.

கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக யட்டியன்தோட்டை பனாவத்த தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே மேற்படி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சே பெரோ மலையக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் உட்பட ஆதரவாளர்கள், மற்றும் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

(மலையக நிருபர் திருஞானம்)