Back to Top

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் டயர் உற்பத்தியில் 3 பில்லியன்

January 12, 2018  12:06 pm

Bookmark and Share
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் டயர் உற்பத்தியில் 3 பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்யவுள்ள சியெட் களனி நிறுவனம் புதிய பஸ் டிரக் ரேடியல் உற்பத்தி, ரேடியல்களின் இரட்டை உற்பத்தி, மோட்டார் சைக்கிள் டயர்கள் என்பனவற்றை உற்பத்தி செய்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் வெளியீடு

கொழும்பு 2018 ஜனவரி 11 வியழக்கிழமை. சியெட் களனி அதன் உற்பத்தி ஆற்றலை மேம்படுத்துவதற்கான புதிய மூன்று பில்லியன் ரூபா முதலீட்டுத் திட்டம் பற்றி இன்று அறிவித்துள்ளது.

இலங்கை இந்திய கூட்டு முயற்சியுடன் கூடிய டயர் உற்பத்தியுடன் புதிய உற்பத்தி அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி என்பன பற்றி நம்பிக்கையுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

உள்ளக நிதி மற்றும் கடன்கள மூலம் இந்த நிதி அமையவுள்ளது. களனியில் அதி நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட டிரக் பஸ் ரேடியல்கள் (TBRs) உற்பத்தி நிலையத்தை நிறுவுதல், அதே இடத்தில் தற்போதுள்ள ரேடியல் டயர் உற்பத்தி வளத்தை மேலும் விரிவு படுத்தல் என்பன புதிய திட்டத்தில் அடங்கும் என கம்பனி அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் இருந்து ஏற்கனவே புதிய இயந்திரங்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளன. 2018 ஜுன் மற்றும் ஜுலையில் டிரக் பஸ் ரேடியல் டயர்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் கிடைத்து விடும்.

சியெட் களனியின் பயணிகள் கார் ரேடியல் (PCR) உற்பத்தியும் இரட்டிப்பாகிவிடும். வேன் மற்றும் SUV வாகனங்களுக்காக தற்போது வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் 500000 டயர்களின் எண்ணிக்கை 850000 ஆக அதிகரிக்கும் என்று சியெட் களனி ஹோல்டிங்ஸ் தலைவர் சானக்க டி சில்வா இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.

கம்பனியின் தற்போதைய மோட்டார் சைக்கிள் டயர் உற்பத்தி ஆற்றல் வருடாந்தம் 375000 ஆகும். புதிய முதலீட்டின் பலனாக இதுவும் இரட்டிப்பாகும் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் முதற் தடவையாக டிரக் பஸ் ரேடியல் டயர் உற்பத்தி செய்யப்படவுள்ளமையானது அந்தத் துறை இறக்குமதிக்கு கணிசமான பிரதியீடாக அமையும்.

இது கணிசமான வெளிநாட்டு நாணயமாற்றை சேமிக்கும். இந்த வகை டயர் உற்பத்தியில் சர்வதேசத்தின் மிக நவீன தொழில்நுட்ப மற்றும் அறிவுப் பரிமாற்றம் மற்றும் உள்ளுர் நிலைமைகளுக்கு ஏற்ற TBRs களின் உற்பத்தி என்பன இவற்றுக்கு வழியமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாரிய அளவிலான முதலீட்டுத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த கணிசமான முதலீடு செய்யப்படுகின்றது. 2016-17 ம் ஆண்டு காலப்பகுதியில் 10.5 பில்லியன் ரூபாய்களாக இருக்கும் கம்பனியின் வருமானத்தை அடுத்த மூன்றாண்டுகளில் அதிகரிப்பதே இதன் குறிக்கோளாகும் என்று சானக்க டி சில்வா மேலும் விளக்கினார்.

இன்று இலங்கையில் இந்த கூட்டு முயற்சியின் மொத்த முதலீடு 5 பில்லியன்களாக உள்ளது. வரையறுக்கப்பட்ட சியெட் இந்தியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனன்ட் கொயேன்கா, சியெட் களனி முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய் காம்பீர் ஆகியோரும் இந்த கூட்டு முயற்சியின் உயர் மட்ட பணிப்பாளர்களும் இணைந்து இலங்கை இந்திய சதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலமாகக் கிடைத்துள்ள மிகச் சிறந்த நன்மைகளில் ஒன்றான இந்த புதிய முதலீடு குறித்த அறிவிப்பில் பங்கேற்றனர்.

´இலங்கையுடனான கூட்டு முயற்சியின் முன்னேற்றம் குறித்து சியெட் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது. அது தற்போது 20 வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பிரத்தியேகமான டயர் வகைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் நாம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றோம்.

மிகவும் அபிவிருத்தி அடைந்த சந்தைகளில் காணப்படும் உற்பத்தி அபிவிருத்திக்கு சகல பிரிவுகளிலும் முன்னேற்றம் கண்ட உற்பத்திகளாக இலங்கை உற்பத்திகளை திகழ வைப்பதில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

சியெட் இந்தியா ஏற்கவே இந்தப் பாதையில் நுழைந்து விட்டது. எமது தொழில்நுட்ப அறிவு மற்றும் சந்தை அனுபவம் என்பனவற்றை தற்போது சியெட் ஸ்ரீலங்காவும் பெற்று வருகின்றது´ என்று அவர் கூறினார்.

களனி ஹோல்டிங்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் விஜய் காம்பீர் குறிப்பிடுகையில் இலங்கையின் வாயு மூலமான டயர் உற்பத்தி தேவையில் சியெட் முத்திரை சுமார் அரைவாசியை பூர்த்தி செய்கின்றது.

இலங்கை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதி செய்யவும் படுகின்றது. பயணிகள் கார் ரேடியல் பிரிவில் எமது சந்தை பங்கு 32 வீதமாகும். டிரக் மற்றும் இலகு டிரக் பிரிவில் எமது சந்தை பங்கு 51 வீதமாக உள்ளது.

இலங்கையில் வர்த்தக ரீதியான டயர்களில் துரிதமான ரேடியல் மயமாக்கல் எமக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. உற்பத்தி ஆற்றல்களை விரிவுபடுத்தவும் அவற்றில் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ளவும் இதுவே மிகச் சிறந்த தருணமாகும் என்று கூறினார்.

உலகளாவிய தரம், உலகளாவிய உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் தரம் என்பனவற்றின் கலவையோடு ரேடியல் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நவீன வசதிகளில் கணிசமான முதலீடுகள் செய்யப்படுவதோடு SUV மற்றும் ஆடம்பர வாகனப் பிரிவுகளுக்கான உற்பத்திகளிலும் தொடர்ச்சியான கவனம் செலுத்தப்பட்டு அந்த ரேடியல் பிரிவுகளின் பெறுமான அதிகரிப்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

எரிபொருள் சேமிப்பு, நீண்டகால டயர் ஆயுள் அடிப்படை செயற்பாடுகள் என்பனவற்றிலும் கம்பனி ஆழ்ந்த கவனம் செலுத்தி வருவதாக கம்பீர் மேலும் கூறினார்.

சியெட் களனி மோட்டார் சைக்கிள் பிரிவில் தற்போது 33 அளவுகளை உற்பத்தி செய்கின்றது. உயர் செயற்பாடு கொண்ட சுப்பர் பைக்ஸ் உற்பட பல பிரிவுகளின் தேவைகளை இது பூர்த்தி செய்கின்றது.

2015ல் கம்பனியின் களனி உற்பத்தி வளப் பிரிவில் தொடக்கப்பட்ட அதி நவீன டயர் உற்பத்தி பிரிவுகளில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் உற்பத்தி ஆற்றலை இரட்டிப்பாக்குவதோடு இந்த உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் இந்த 3 பில்லியன் மூலதனத்தின் ஒரு இலக்காகும்.

ஜப்பானுக்கு வெளியே 2017ல் கீர்த்திமிக்க டேமிங் பரிசை வென்ற ஒரே நிறுவனம் சியெட் ஆகும். அதி உயர்தரம் கொண்ட டயர் உற்பத்தியாளர்கள் என்ற சியெட்டின் நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு அங்கீகாரமாவே இந்தப் பரிசு அமைந்துள்ளது.

மேலும் உலகளாவிய ரீதியில் டயர் உற்பத்தி துறையில் பொருத்தமான பங்காளிகளை அடையாளம் காணவும் இது வழிவகுத்துள்ளது. இது மொத்த தர முகாமைத்துவத்துக்கான (TQM) உயர் மட்ட சர்வதேச விருதாகும். இந்த டேமிங் விருதானது TQM இல் தனிநபர்களின் பங்களிப்பு மற்றும் வர்த்தகங்களின் பங´களிப்பு என இரு தரப்பையும் அங்கீகரிக்கின்றது.

1951ல் எட்வர்ட் டேமிங் என்பவரை கௌரவிக்கும் வகையில் இந்த விருது ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஜப்பானில் தரக் கட்டுப்பாட்டுக்காக அளப்பரிய பங்களிப்பைச் செய்தவரே இவராவார்.

இலங்கையில் உள்ள சியெட் களனி நிறுவனம் ரேடியல், வர்த்தக, மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, விவசாய இயந்திரப் பிரிவு என்பவற்றுக்கான டயர் உற்பத்தி வளங்களை உள்ளடக்கியது.

சியெட் நிறுவனம் ரேடியல் பிரிவில் 32 வீத சந்தைப் பங்கையும், டிரக் மற்றும் இலகு டிரக் பிரிவில் 51 வீத பங்கையும், முச்சக்கர வண்டிப் பிரிவில் 23 வீதமும், விவசாய உபகரண டயர் பிரிவில் 72 வீத சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது.

சியெட் ஸ்ரீலங்காவின் உற்பத்திகள் தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தூர கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ரூபாய்களை முதலீடு செய்யவுள்ள சியெட் களனி நிறுவனம் புதிய பஸ் டிரக் ரேடியல் உற்பத்தி, ரேடியல்களின் இரட்டை உற்பத்தி, மோட்டார் சைக்கிள் டயர்கள் என்பனவற்றை உற்பத்தி செய்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம் வெளியீடு

சியெட் ஸ்ரீலங்காவின் உற்பத்திகள் தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தூர கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Most Viewed