Back to Top

கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கண்டுபிடிக்க கடற்படை உதவி(படங்கள்)

கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கண்டுபிடிக்க கடற்படை உதவி(படங்கள்)

January 12, 2018  02:10 pm

Bookmark and Share
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், நேற்று (11) வடமேல் கடற்படையின் மெரீன் படையினர், சிலாபத்துறை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் போதைப் பொருள் ஒழிப்பு படையினர் இணைந்து காயக்குழி பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலில் 356 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கேரள கஞ்சா தொகை அவ்விடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமாக இருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக சிலாபத்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு கடற்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) கடற்படை வீரர்கள் மற்றும் கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை மேற்கொண்ட தேடுதலில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்த போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 1000 மாத்திரைகள் கிடைத்துள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணை வெல்லம்பிட்டிய பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

Most Viewed