Back to Top

மூன்று சகோதர்கள் ஏற்கனவே உயிரிழப்பு; தொடர்ந்து மரணத்தை எதிர்பார்த்திருக்கும் இரண்டு சகோதரர்களின் சோகம்

மூன்று சகோதர்கள் ஏற்கனவே உயிரிழப்பு; தொடர்ந்து மரணத்தை எதிர்பார்த்திருக்கும் இரண்டு சகோதரர்களின் சோகம்

January 12, 2018  02:32 pm

Bookmark and Share
கல்லீரல் பாதிப்பால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் சம்பந்தமான சோக சம்பவம் ஒன்று நவத்தேகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நவத்தேகம, அந்தருவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 05 வயதுடைய ஜினுலி பிந்தரா மற்றும் 03 வயதுடைய சாமிக ஹர்ஷன என்ற இரண்டு சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு சிறுவர்களுக்கும் மூன்று மூத்த சகோதர சகோதரிகள் இருந்துள்ளதுடன், அவர்கள் சிறு வயதிலேயே கல்லீரல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த இரண்டு சிறுவர்களையும் பிறந்த உடனேயே வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ள பெற்றோருக்கு, இந்த சிறுவர்களும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தியே அறிய கிடைத்துள்ளது.

இந்த இரண்டு சிறுவர்களும் உயிர் பிழைக்க வேண்டுமானால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ள போதிலும், அங்கவீனமுற்றுள்ள இராணுவ வீரரான தந்தைக்கோ அல்லது தாய்க்கோ அதற்குறிய வசதியில்லை.

எவ்வாறாயினும் 05 வயதுடைய ஜினுலி பிந்தராவிற்கு ஒன்றரை வருடத்திற்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள வைத்தியர்கள், 03 வயதுடைய சாமிக ஹர்ஷனவிற்கு வழங்கியுள்ள கால எல்லை வெறும் 03 மாதங்கள் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.

Most Viewed