Back to Top

இலங்கையின் முதலாவது விநியோகஸ்தர் நம்பிக்கைக்குரிய டெபிட் கார்ட்

இலங்கையின் முதலாவது விநியோகஸ்தர் நம்பிக்கைக்குரிய டெபிட் கார்ட்

January 12, 2018  04:48 pm

Bookmark and Share
இலங்கையில் டெபிட் மற்றும் கிரடிட் கார்ட் பிரிவில் சந்தையில் முன்னணியில்; வகிக்கும் கொமர்ஷல் வங்கி ஹைபிரிட் கார்ட்டுகளை அறிமுகம் செய்து இந்தத் துறையில் சாதனை படைத்துள்ளது.

இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளர்களான முன்னர் ஹோல்சிம் லங்கா என அழைக்கப்பட்ட INSEE சீமெந்து நிறுவனத்துடன் இணைந்து முதலாவது டீலர் லோயல்டி கார்ட்டாக இதனை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் சில்லறை சீமெந்து விற்பனையில் முன்னணி வர்த்தக நாமமான INSEE சீமெந்து, சன்ஸ்தா, INSEE மகாவலி மெரைன் என்பன நாடு முழுவதும் கம்பனியின் அர்ப்பணத்துடன் கூடிய லோயல்டி திட்டமான ´இலக்கய´ திட்டம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

INSEE இலக்கய லோயல்டி டெபிட்கார்ட் விநியோகத்துக்கான கொமர்ஷல் வங்கியுடனான இந்த முக்கிய பங்குடைமையானது வாடிக்கையாளர்களுக்கு எல்லா நன்மைகளையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பினை அளிக்கின்றது.

கொமர்ஷல் வங்கி டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கான எல்லா நன்மைகளும் ஊக்குவிப்பு வாய்ப்புக்களும் இதற்கும் வழங்கப்படுகின்றன.

INSEE சீமெந்து மற்றும் உற்பத்திகளை வாங்குகின்றவர்களும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்கின்றவர்களும் அதன் மூலம் கிடைக்கும் லோயல்டி புள்ளிகளை இந்த கார்ட் பாவனையின் போது கழித்துக் கொள்ள முடியும்.

இந்த பல்செயற்பாட்டு ஹைபிரிட் கார்ட்டின் அறிமுகம் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக வசதிகள் மற்றும் புத்தாக்க உற்பத்திகளை அறிமுகம் செய்வதில் கொமர்ஷல் வங்கி கொண்டுள்ள அர்ப்பணத்துக்கான இன்னொரு உதாரணமாகத் திகழ்கின்றது என்று கூறினார் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி எஸ்.ரெங்கநாதன்.

INSEE சீமெந்தின் சகல விநியோகஸ்தர்களுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. சிப் இணைப்பு கொண்ட INSEE லோயல்டி டெபிட் கார்ட் நியர் பீல்ட் தொடர்புகொள்ளல் (NFC) டெப் அன்ட் கோ தொழில்நுட்ப வசதி கொண்டது.

இது விநியோகஸ்தர்களின் கொமர்ஷல் வங்கி சேமிப்புக் கணக்கோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

இது அவர்களுக்கு லோயல்டி புள்ளிகளை பெற வசதி அளித்துள்ளதோடு அந்தப் புள்ளிகள் மாதாந்தம் அவர்களது சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது.

இந்தப் புள்ளிகளை தமது லோயல்டி கார்ட் மூலம் விநியோஸ்தர்கள் பயன்படுத்த முடியும்.

INSEE இல் புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மேலதிகமாக INSEE சீமெந்துகளை வாங்குகின்ற போது இந்த கார்ட் வைத்திருப்பவர்கள் மெக்ஸ் லோயல்டி புள்ளிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

கொமர்ஷல் வங்கி பங்காளி வர்த்தக நிலையங்களில் INSEE இலக்கய டெபிட் கார்ட்களைப் பாவிக்கின்ற போது மெக்ஸ் லோயல்டி புள்ளிகளைப் பெற முடியும். தற்போது இந்த லோயல்டி கார்ட்டுகள் டெபிட் கோல்ட் மற்றும் டெபிட் பிளேடினம் வகைகளில் வழங்கப்படுகின்றது.

INSEE சீமெந்து சியாம் சிட்டி (லங்கா) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது சியாம் சிட் சீமெந்து பப்ளிக் கம்பனி லிமிட்டட் (SCCC) குழுமத்தின் ஒரு அங்கத்துவ நிறுவனமாகும்.

இது 1969ல் தாய்லாந்தில் நிறுவப்பட்டது. இன்று தென்கிழக்கு ஆசியாவில் மிக முன்னணியில் உள்ள சீமெந்து உற்பத்தி நிறுவனமாகும். இந்தக் கம்பனி INSEE முத்திரையின் கீழ் சன்ஸ்தா, மகாவலி மெரைன், மகாவலி மெரைன் பிளஸ், றெபிட் புளோ, றெபிட் புளோ பிளஸ், எக்ஸ்ட்ரா சிமென்ட் பிரடக்ஸ் உற்பத்திகளை வழங்குகின்றது.

INSEE சீமெந்து தான் இலங்கையில் உற்பத்தியாகும் முதலாவது பசுமை சீமெந்தாகும். பசுமைக் கட்டிட கவுன்ஸிலால் வழங்கப்படும் கிறீன் லேபிள் சான்றிதழையும் இது பெற்றுள்ளது.

இலங்கையில் முழு அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரேயொரு சீமெந்து உற்பத்தி நிறுவனம் இதுவாகும்.

சியாம் சிட்டி சீமெந்து நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவரும் வர்த்தக பணிப்பாளருமான ஜாங் கூனிக்ச் இது பற்றி குறிப்பிடுகையில் விநியோகஸ்தர்களையும் அவர்களது குடும்பங்களையும் இத்தகைய புதுமையான பிரயோக வடிவமைப்புக்கள் மூலம் வலுவூட்டுவதென்பது அவர்களது கணிசமான பங்களிப்புக்கு கிடைக்கின்ற ஒரு அங்கீகாரமாகும் என்றார்.

இதற்கென இதேபோன்ற ஒத்த சிந்தனை கொண்ட நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான கொமர்ஷல் வங்கி போன்ற ஒரு பங்காளியை கண்டுபிடித்ததன் மூலம் நாடு முழுவதும் உள்ள கம்பனியின் விநியோக வலையமைப்பை மேலும் ஸ்திரப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை INSEE சீமெந்துக்கு ஏற்படுத்தியுள்ளது என்றார்.

கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 261 கிளை வலையமைப்பையும் 756 ATM இயந்திர வலையமைப்பையும் கொண்டு செயற்படுகின்றது.

2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வங்கி 30 சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகனை வென்றுள்ளது.

இலங்கையின் தலைசிறந்த வங்கிரூபவ் சிறந்த வர்த்தக வங்கிரூபவ் மிக உறுதியான வங்கி, மிக கௌரவமான வங்கி என பல விருதுகளை உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளியீடுகளிடம் இருந்து கடந்த பல ஆண்டுகளில் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை பெரும்பான்மை பங்குகளுடன்; வங்கி திறந்துள்ளது.

முழு அளவிலான பணப்பரிமாற்ற சேவைகளை மேற்கொள்ளும் நிலையம் ஒன்றை இத்தாலியிலும் கொமர்ஷல் வங்கி திறந்துள்ளது.