Back to Top

2 மாணவிகளை கற்பழித்த பாடசாலை காவலாளிக்கு தூக்கு தண்டனை!

2 மாணவிகளை கற்பழித்த பாடசாலை காவலாளிக்கு தூக்கு தண்டனை!

January 13, 2018  08:48 am

Bookmark and Share
மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டம் பந்துர்ணா கிராமத்தில் உள்ள உண்டு - உறைவிட பாடசாலையில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த பாடசாலையில் ராஜ்குமார் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு ராஜ்குமார், சிறுமிகளை பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தினார். மேலும், 2 சிறுமிகளை தனிமையில் அழைத்து சென்று கற்பழித்தார்.

அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து ராஜ்குமாரை பொலிஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரும் சிக்கினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை வார்தா நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி அஞ்சு ஷிண்டே நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் ராஜ்குமாரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி அவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த நபருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Most Viewed