Back to Top

2000 மெடரிக் தொன் உரம் இலங்கை வருகிறது

2000 மெடரிக் தொன் உரம் இலங்கை வருகிறது

January 13, 2018  01:45 pm

Bookmark and Share
2000 மெடரிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையை வந்தடைய உள்ளதாக உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் ரோஷன வடுகே கூறினார்.

இதேவேளை நாட்டினுள் தற்போது உரத் தட்டுப்பாடு இல்லை என்று விவசாய அமைச்சின் உர செயலாளர் காரியாலயம் கூறியுள்ளது.

சிறுபோகத்துக்கு தேவையான அளவு உரம் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பணிப்பாளர் அஜித் புஷ்பகுமார கூறினார்.