Back to Top

இன்று காலநிலை எப்படி?

இன்று காலநிலை எப்படி?

January 14, 2018  12:06 pm

Bookmark and Share
இன்று முதல் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,ம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேவேளை ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும். இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Most Viewed