Back to Top

deedat Active Wear அறிமுக நிகழ்வில் deedat Challenge

deedat Active Wear அறிமுக நிகழ்வில் deedat Challenge

January 29, 2018  03:43 pm

Bookmark and Share
முன்னணி இளைஞர் வர்த்தக நாமமான ´deedat´ கண்டி சிட்டி சென்டரில் புதிய ´deedat Active wear´ ஆடைத்தெரிவுகளை அறிமுகம் செய்திருந்த நிகழ்வுடன், 2017 ஆம் ஆண்டை நிறைவு செய்திருந்தது.

இந்த அறிமுக நிகழ்வு 2017 டிசம்பர் 30ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நவநாகரிகம் மற்றும் உடற்கட்டமைப்பு ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த புதிய அறிமுகம் அமைந்திருந்தது. மு.ப. 10.45 முதல் பி.ப. 1.30 வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த ´deedat Challenge´ மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வெற்றியீட்டுவதற்கு வாய்ப்புகளை வழங்கியிருந்தது.

இந்த வழமைக்கு மாறான முற்றிலும் புதிய வாடிக்கையாளர் செயற்பாடானது, வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வெல்லக்கூடிய push-ups, pull-ups, squats போன்றவற்றை முன்னெடுக்க வாய்ப்பளித்திருந்தது. மேலும், கண்டி சிட்டி சென்டரில் முன்னெடுக்கப்பட்டிருந்த deedat challenge மூலமாக உடற்கட்டமைப்பை பேணுவதில் ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு dead lifts, jumping jacks, planks போன்ற சவால் மிகு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளை னநநனயவ வழங்கியிருந்தது.

குறித்த தினத்தில் கண்டி சிட்டி சென்ரரின் பிரதான வரவேற்பு பகுதியில் புகழ்பெற்ற ரக்பி வீரர்களான ஃபாசில் மரிஜா – முன்னாள் இலங்கை ரக்பி அணித்தலைவர், இலங்கை ரக்பி வீரர்களான ரிச்சர்ட் தர்மபால மற்றும் நைஜெல் ரத்வத்த ஆகியோர் வருகை தந்திருந்ததுடன், deedat Active அறிமுக நிகழ்வில் பங்கேற்று வாடிக்கையாளர்கள் பரிசுகளை வெற்றியீட்ட ஊக்குவித்திருந்தனர். மேலும் அவர்கள் பங்கேற்ற சுரபடில Rugby Movements தொடர்ந்து இடம்பெற்ற பிரபல உடற் கட்டமைப்பு பயிற்றுநர்களின் துடிப்பு மிக்க உடற்பயிற்சி செயற்பாடுகள், பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்த Freestyle fighting மற்றும் Dinada குழுவின் மேள வாத்தியம் என்பனவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தன. இந்த சவால்கள் நிறைந்த காலைப்பொழுது நவீன deedat Active wear தெரிவுகளை அணிவதற்கு வாய்ப்பளிப்பதுடன் நிறைவடைந்திருந்தது.

NOLIMIT சந்தைப்படுத்தல் முகாமையாளர் ரனீஸ் ஷெரீஃப் கருத்துத்தெரிவிக்கையில், ´எமது புதிய deedat designer Active wear தெரிவுகள் NOLIMIT மற்றும் Glitz காட்சியறைகளில் கிடைக்கின்றன. இவை சர்வதேச பாணிகளில் அமைந்துள்ளதுடன், எமது இளைஞர்களுக்கு சகாயமானவையாகவும் அமைந்துள்ளன. deedat Challenge போன்ற மாபெரும் வாடிக்கையாளர் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக வாடிக்கையாளர்களின் பங்குபற்றல்களை ஊக்குவித்து, அவர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்´ என்றார்.

Deedat Active wear தெரிவுகள் வியர்வையை அகற்றும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதுடன், வியர்வையை உறிஞ்சி சருமத்தை புத்துணர்ச்சியுடனும் குளிர்ச்சியாகவும் பேணும். இந்த வர்த்தக நாமம் அக்குள் பகுதிகளுக்கான வியர்வை தவிர்ப்பு தடுப்புகளுக்கான காப்புரிமையை கொண்டுள்ளதுடன், சருமத்திலிருந்து ஈரப்பதனை அகற்றும் வகையில் இந்த தெரிவுகள் அமைந்துள்ளன. அரைக்காற்சட்டைகள் வியர்வையை அகற்றும் வகையில் அமைந்துள்ளதுடன், இலகு எடை கொண்டதாகவும், காற்றுப்புகக்கூடிய துணி வகையை சேர்ந்ததாகவும் அமைந்துள்ளதால் அணிபவர் எந்நேரமும் உலர்ந்த நிலையிலும் சௌகரியமாகவும் திகழ முடியும்.

இன்றைய இளைஞர்கள் பிரத்தியேகமான நவநாகரிகமான ஆடை அலங்காரங்களை விரும்புகின்றனர். இவர்களுக்கு பொருத்தமான ஆடைத்தெரிவுகளை இலங்கையின் மாபெரும் நவநாகரிக ஆடைகள் விற்பனைத்தொடரான NOLIMIT மற்றும் Glitz காட்சியறைகள் கொண்டுள்ளதுடன், நாடு முழுவதிலும் 21 காட்சியறைகள் காணப்படுகின்றன. 1992ல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல் NOLIMIT பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. பரந்தளவு deedat தெரிவுகள் நாடு முழுவதிலுமுள்ள NOLIMIT மற்றும் Glitz காட்சியறைகளில் கிடைக்கின்றன.