Back to Top

கரையொதிங்கிய 50 கிலோ எடை கொண்ட திமிங்கிலத்தின் முள்ளந்தண்டு

கரையொதிங்கிய 50 கிலோ எடை கொண்ட திமிங்கிலத்தின் முள்ளந்தண்டு

January 31, 2018  09:28 am

Bookmark and Share
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு, காட்டுப்புலம் கடற்கரைப்பகுதியில் 50 கிலோ எடை கொண்ட திமிங்கிலத்தின் முள்ளந்தண்டு கரையொதிங்கியுள்ளது.

இன்று (31) காலை தொண்டைமானாறு பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் இருவர் தொழிலுக்காக கடலுக்குச்சென்ற வேளை கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவர்களால் குறித்த திமிங்கிலத்தின் முள்ளந்தண்டின் சிறிய பாகம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பாகம் முவாயிரத்து முன்னூறு கிலோ எடைகொண்ட நீலத்திமிங்கிலத்தின் பாகம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த திமிங்கிலமானது கடல்வாழ் உயிரினங்களில் மிகப்பெரியது என்றும் இத்திமிங்கிலம் அண்ணளவாக முன்னூறு ஆண்டுகள் வாழக்கூடியது என்றும் ​தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட திமிங்கிலத்தின் முள்ளந்தண்டுப்பகுதி கடற்கரையோரத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த திமிங்கிலம் ஆயிரத்து எழுநூறு லீற்றர் இரத்தத்தனைக் கொண்ட கடல்வாழ் உயிரினம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட திமிங்கிலத்தின் பாகத்தினை பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருவதோடு இதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(யாழ் நிருபர் சுமித்தி)