Back to Top

பேருந்து விபத்தில் சிறிய குழந்தை உட்பட 05 பேர் காயம்

பேருந்து விபத்தில் சிறிய குழந்தை உட்பட 05 பேர் காயம்

February 1, 2018  11:24 am

Bookmark and Share
நுரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகரத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சிறிய குழந்தை உட்பட 05 பேர் காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (01) காலை 07.40 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகர் புறத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து அதிக வேகத்தின் காரணமாக நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் டொப்பாஸ்ட் மண்மேடு பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியதாக நுவரெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தின் காரணமாக தனியார் பேருந்து சாரதி கைது செய்யபட்டுள்ளதோடு பேருந்தின் சாரதி இன்றைய தினம் நுவரெலிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(மலையக நிருபர் சதீஸ்)