Back to Top

அக்னி - 1 ஏவுகணை சோதனை வெற்றி

அக்னி - 1 ஏவுகணை சோதனை வெற்றி

February 7, 2018  09:30 am

Bookmark and Share
அதிநவீன அக்னி-1 ஏவுகணை சோதனை நேற்று (06) ஒடிஸா மாநிலத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக அது தாக்கியதாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-1 ஏவுகணையானது சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் தளவாடங்களை அழிக்கும் திறன் கொண்டது.

அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் அதில் இருப்பது கூடுதல் சிறப்பு. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்ட அக்னி - 1 ஏவுகணையின் மொத்த எடை 12 டன் ஆகும்.

சுமார் 1 டன் எடை வரையிலான அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் அதற்கு உண்டு.

அதைத் தவிர, வழிகாட்டும் (நேவிகேஷன்) வசதியும், வேறு சில தொழில்நுட்ப வசதிகளும் அதில் அமைந்துள்ளன. 15 மீட்டர் நீளம் கொண்ட அக்னி-1 ஏவுகணை ஏற்கெனவே பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒடிஸா மாநிலம் பாலாசோரில் அமைந்துள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் அக்னி-1 ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு இந்த ஏவுகணையானது விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் செயல்பாடுகள் ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டன.

குறிப்பிட்ட நேரத்தில் 700 கிலோ மீட்டரைக் கடந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது அக்னி - 1 ஏவுகணை. இதையடுத்து சோதனை வெற்றி பெற்றதாக இந்திய பாதுகாப்புப் படையினர் அறிவித்தனர்.

Most Viewed