Back to Top

Pee Bee ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமங்கள், தலைமையாளர்களில் ஒன்றாக தெரிவு

Pee Bee ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமங்கள், தலைமையாளர்களில் ஒன்றாக தெரிவு

February 7, 2018  10:49 am

Bookmark and Share
Flora டிஷுக்கள் உற்பத்தியில் ஈடுபடும் Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் பிரைவட் லிமிட்டெட், அண்மையில் நடைபெற்ற ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

இதில் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிஷோர் சுர்தானிக்கும் ஆசியாவின் சிறந்த தலைமையாளர் விருது வழங்கப்பட்டிருந்தது.

அண்மையில் நடைபெற்ற ஆசியாவின் சிறந்த வர்த்தக நாமங்கள் மற்றும் தலைமையாளர்கள் 2017 விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது இந்த கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

ஜனவரி 29ம் திகதி, சிங்கப்பூரின் மரினா பே சான்ட்ஸ் எக்ஸ்போ அன்ட் கொன்வென்ஷன் சென்ரரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு சமாந்தரமாக, இந்தோ-சிங்கப்பூர் வியாபார மற்றும் சமூக செயலமர்வு 2018ம் நடைபெற்றது.

இதில் 200க்கும் அதிகமான வர்த்தகர்கள், இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், சமூக தலைவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

100க்கும் அதிகமான விருதுகள் வழங்கப்பட்டதுடன், 16க்கும் அதிகமான ஆசிய பிராந்திய நாடுகளுக்கு இந்த விருதுகள் பகிரப்பட்டிருந்தன.

இந்நிகழ்வை URS-AsiaOne சஞ்சிகை மற்றும் UWG மீடியா கொன்சல்டிங் பிஎல் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், இவற்றின் செயன்முறை மீளாய்வாளராக பிரைஸ்வோட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் பிஎல் நிறுவனமும் இணைந்திருந்தது.

நிறுவனத்தின் முதல்தர உற்பத்தியான Flora டிஷுக்களுக்கு இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையின் டிஷுக்கள் சந்தையில் சுமார் 60 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ளது. கூட்டாண்மை பிரிவுகள் மற்றும் பாவனையாளர் பிரிவுகளில் நிறுவனத்தின் டிஷு தயாரிப்புகளுக்கு பெருமளவு வரவேற்பு காணப்படுவதுடன், Flora தயாரிப்புகளை பிரத்தியேகமானவை, தூய்மையானவை மற்றும் புத்தாக்கமானவை என கருதும் வாடிக்கையாளர்களினால் வர்த்தக நாமம் பெருமளவு அனுகூலம் பெறுகிறது.

Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் கிஷோர் சுர்தானி கருத்துத் தெரிவிக்கையில், ´ஆசியாவின் சிறந்த வர்த்தக நாம மதிப்பு மற்றும் தலைமைத்துவத்தை நாம் கொண்டுள்ளமைக்காக பெருமை கொள்கிறோம்.

இந்த ஊக்கம், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து புத்தாக்கமான தயாரிப்புகளை எமது வாடிக்கையாளர்களுக்கு தரங்களை பேணி வழங்க எண்ணியுள்ளோம். இதனூடாக அவர்களுடைய வெவ்வேறு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள உறுதியான பிணைப்பை ஏற்படுத்த முடியும் எனக் கருதுகிறோம். இது எமது தற்போதை சந்தைப் பங்கின் மூலமாக உறுதியாகியுள்ளது´ என்றார்.

மேலும் இந்த நிகழ்வின் போது, சில வியாபார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தன. இதன் போது, பிராந்தியத்தில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் புதிய வழிமுறைகளை கண்டறிவது மற்றும் ஆசியாவுக்கும் உலகுக்கும் சிறந்தவை என்ன என்பது பற்றியும் ஆராயப்பட்டிருந்தன.

Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் பிரைவட் லிமிட்டெட் தற்போது தனது நான்கு ஆண்டு வருமான இரட்டிப்பு மற்றும் வர்த்தக நாம பெறுமதியை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகிறது.

நிறுவனத்தின் செயற்பாடுகள் 10 ஊழியர்கள் என்பது முதல் 250 ஊழியர்கள் வரை அதிகரித்துள்ளது.

நவீன வசதிகள் படைத்த உற்பத்தி ஆலை, களஞ்சியசாலை மற்றும் விநியோக வசதிகளை கொண்டுள்ளது. ஹோமகம, கட்டுவான தொழில்பேட்டையில ; 50000 சதுர அடியில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

இது போன்ற சர்வதேச விருதுகளுக்கு நிறுவனம் ஏற்கனவே தெரிவாகியிருந்தது. அண்மையில் WORLDCOB இனால் வழங்கப்பட்டிருந்த பெருமைக்குரிய BIZZ விருதையும் தனதாக்கியிருந்தது.

அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளிலுள்ள துறையின் பல சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட்டு இந்த விருதை பெற்றிருந்தது.

மேலும், ஆசியா கூட்டாண்மை சிறப்புகள் மற்றும் நிலைபேறாண்மை விருதுகள் வழங்கல் நிகழ்வில் ஆசியாவின் ‘top SME in Asia’ விருதையும் பெற்றிருந்தது.

இலங்கையில் மென்மையான பாவித்த பின்னர் அகற்றக்கூடிய டிஷு கடதாசிகளை அறிமுகம் செய்வதை இலக்காகக்கொண்டு நிறுவப்பட்ட Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் பிரைவட் லிமிட்டெட் மற்றும் அதன் முன்னணி வர்த்தக நாமமான Flora டிஷுக்கள் போன்றன சந்தையில் பெரும் பங்கை தம்வசம் கொண்டுள்ளதுடன், SLS சான்றளிக்கப்பட்ட பொருட்களையும் கொண்டுள்ளன.

தரத்தில் உயர் மட்டத்தை பேணுவதுடன், தொழில்நுட்பத்தில் உயர்ந்து வருவதுடன், புத்தாக்கம் மற்றும் குழுநிலை செயற்பாடுகளுடன் வியாபார நிபுணத்துவத்தையும் பேணி வருகிறது.

Most Viewed