Back to Top

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அருகாமையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அருகாமையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

February 7, 2018  01:44 pm

Bookmark and Share
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அருகாமையில் லெதன்டி தோட்டபகுதியில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடலம் ஒன்று இனங்கானப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (07) காலை காலை 09.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

லெதன்டி தோட்ட மக்களால் ஹட்டன் பொலிஸாருக்க வழங்கபட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுத்தையை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுத்தைக்கு கழுத்து பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் இது தொடர்பாக வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மலையக நிருபர் சதீஸ்)

Most Viewed