Back to Top

அதிக சதம் அடித்து பட்டியலில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி

அதிக சதம் அடித்து பட்டியலில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி

February 8, 2018  09:58 am

Bookmark and Share
தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் தலைவர் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத்தொடர்ந்து சவுரவ் கங்குலி 11 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த 12 சதங்களையும் அவர் தலைவராக பொறுப்பேற்ற 43 போட்டிகளில் அடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 55 சதங்களுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் (100), ரிக்கி பாண்டிங் (71), குமார் சங்ககாரா (63), ஜாக்கஸ் கல்லிஸ் (62) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் அவர் 100 ஓட்டங்களை கடக்க 119 பந்துகள் எடுத்துகொண்டார். முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகவும் 119 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.