Back to Top

சென்ரல் இன்டஸ்ரீஸ் PE நீர் குழாய்களுக்கு பிரித்தானிய WRAS சான்றிதழ்

சென்ரல் இன்டஸ்ரீஸ் PE நீர் குழாய்களுக்கு பிரித்தானிய WRAS சான்றிதழ்

February 8, 2018  02:24 pm

Bookmark and Share
சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சிநிறுவனம் இலங்கையின் முன்னணி நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளராக திகழ்வதுடன், ´நஷனல் PVC´உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் PE (Polyethylene) தெரிவுகளுக்கு பிரித்தானியாவின் WRAS சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நீர் ஒழுங்குபடுத்தல் ஆலோசனை ஏற்பாடுஎனும் WRAS உலகப்புகழ் பெற்ற நீர் விநியோகம் மற்றும் நீர் வழங்கலின் தூய்மை நிலைகள் (குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள்) தொடர்பில் கவனம் செலுத்தும் நிறுவனமாக திகழ்கிறது. இந்த விடயம் தொடர்பான ஒழுங்குபடுத்தல் வேலை, ஆலோசனை வேலை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

WRASன் பிரதான இலக்கு என்பது உலகின் குடித்தொகைக்கு தூய்மையான எவ்விதமான பாதிப்புகளுமின்றி நீரை விநியோகிப்பதாக அமைந்துள்ளது.

உலகின் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் PE தயாரிப்புகளை சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி உற்பத்தி செய்துள்ளது.

சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மயூர ரூபதுங்க கருத்துத் தெரிவிக்கையில், ´WRAS சான்றிதழ் மூலமாக தூய்மையான நிலைமைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், PE தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்படும் PVC தயாரிப்புகளின் உயர் தரம் மற்றும் தூய்மையான நிலை போன்றன இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது´ என்றார்.

´WRAS சான்றிதழ் வழங்கப்படுவது, தூய்மையான நீர் விநியோக முறைகள் மற்றும் நீர் விநியோகத்தில் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களின் உற்பத்தியாளர்களுக்கு என்பதை முழு உலகமும் அறியும். எமது நிறுவனத்தின் பிரதான நோக்கு, நிறுவனத்தின் சகல தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் உயர் தரங்களை பேணுவதாகும். முன்னணி PVC நீர் குழாய் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர் நிறுவனம் எனும் வகையில், உலகின் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க பங்களிப்பு வழங்குகிறோம்´ என்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ´தமது தேவைக்கு மக்கள் நீர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்யும் போது, சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி நிறுவனம் PE நீர் குழாய்களை மிகவும் உச்ச தூய்மையான நிலைகளில் உற்பத்தி செய்வதை உறுதி செய்து கொள்ளமுடியும்´ என்றார்.

இலங்கையின் முன்னணி நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான சென்ரல் ஃபினான்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமாக சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி திகழ்கிறது. இலங்கையில் காணப்படும் சகல PVC உற்பத்தியாளர்கள் மத்தியிலும், சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி, முதன் முறையாக நீர்-குழாய் உற்பத்தி மற்றும் குழாய் சாதனங்கள் உற்பத்திக்காக SLS 147 மற்றும் SLS 659 தரச்சான்றுகளை தனதாக்கியிருந்தது.

நிறுவனத்தின் தயாரிப்புகளில், சோல்வன்ட் சீமெந்து, மழைநீர் முகாமைத்துவ கட்டமைப்பு, மின் கொன்டியுட்கள், PE நீர்-குழாய்கள், PE நீர் தாங்கிகள், ஸ்டெய்ன்லெஸ் ஸ்ரீல் நீர் தாங்கிகள், செப்டிக் தாங்கிகள், தோட்ட ஹோஸ்கள், நஷனல் கொம்பெக்ட் போல்-வால்வுகள், கிரிப்டன் இலத்திரனியல் சுவிச்கள், செக்கட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் மற்றும் வடிம்புபோட்டின் கிறீன் வுட் ஆகியன அடங்கியுள்ளன.