Back to Top

Samsung சமூக வெளயீடு மற்றும் தொழில்நுட்ப மேன்மையுடன் இலங்கையை வலுப்படுத்துகின்றது

Samsung சமூக வெளயீடு மற்றும் தொழில்நுட்ப மேன்மையுடன் இலங்கையை வலுப்படுத்துகின்றது

February 8, 2018  06:54 pm

Bookmark and Share
உலகின் முதல் நிலை ஸ்மாட் தொலைபேசி என தமது நிலையை மீளவலியுறுத்தி, இலங்கையில் பெரும்பாலான சந்தை பங்கினைபேணுவதில் Samsung உறுதியாக உள்ளது என Samsung இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஹான் பேபார்க் தெரிவித்தார். ´நுகர்வோருக்கு அளப்பரிய சாத்தியங்களை புது வருடத்தில் வழங்கும் நிலையில் இலங்கையில் Samsung முதலிடத்தில் உறுதியாக இருக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்´ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சந்தையில் அளப்பரிய வளர்ச்சியை அனுபவிக்கும் அதேவேளை, கைபேசி துறையில் தமது அடையாளத்தை உறுதி செய்வதுடன், வளர்ந்து வரும் சந்தை ஒன்றாக இலங்கைக்கு நுகர்வோர்களின் அர்ப்பணிப்பினை உத்தரவாதப்படுத்துவதற்கும் நாம் திட்டமிடுகின்றோம் என திரு. பார்க் அவர்கள் கூறினார்.

தனியான சேவை நிலையத்தின் ஊடாக சிறந்த சேவை வழங்கலை உறுதிசெய்வதே அதன் பிரதான அம்சமாகும். உறுதியான உள்ளூர் பங்காளர் ஒருவரின் ஊடாக அது முன்னெடுக்கப்படும். இருப்பினும், அளப்பரிய சேவையுடன் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக நாமத்தினை உறுதி செய்வதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.

´இலங்கையில் உள்ள பங்காளர்களுக்கும் நாம் நன்றியுடையோம். Samsung குடனான அளப்பரிய பங்காளித்துவத்தினை வழங்கிய Softlogic, John Keells Office Automation, Sinhagiri, Singer, Dialog, Mobitel ஆகிய பங்காளர்களின் ஆதரவின்றி எம்மால் ´இந்த வளர்ச்சியை எட்ட முடியாது´ என திரு பார்க் கூறினார்.

´2018ஆம் ஆண்டில், உன்னத தரத்தினை வழங்கும் அதேவேளை, விரிவாக்கப்பட்ட வசதிகளுடன் புதிய தயாரிப்புக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 4ஜி அலைவரிசை, இணைய இணைப்பு பயன்பாட்டு சேமிப்பு பயன்கள் மற்றும் வேறெங்குமில்லாத புகைப்பட தொழில்நுட்பம் போன்ற சிறந்த அம்சங்களையும் இந்த தயாரிப்புக்கள் வழங்கும்´ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஸ்மாட் கைபேசி துறையில் விருப்புக் கேற்றப யன்கள் பலவற்றை வழங்குவதற் Samsung இலங்கை திட்டமிடுகின்றது. தனித்துவமான பல அம்சங்களுக்கான அணுகும் வசதியுடன் பெறுமதி சேர்க்கும், அவர்களது ஸ்மாட் கைபேசிகளின் ஆற்றலை பரவலாக்கும், புத்தாக்கமான, அணியக் கூடிய தெரிவுகள், மற்றும் சிறந்த வசதிகளை உள்ளடக்கியிருக்கும்.

மேலதிகமாக, டயலோக்குடன் இணைந்து மெய்நிகர் யதார்த்தவலய (Virtual Reality Zone) தனித்துவமான அனுபவத்தினை வழங்கவும் Samsung இலங்கை உறுதியளிக்கின்றது. வாடிக்கையாளர்களின் அனுபவத்தினை இந்த புத்தாக்க அனுபவம் பரவலாக்கி, ஒரு புது கட்டத்திற்கு அம்சத்தினை இட்டுச் செல்லும் என திரு பார்க் அவர்கள் தெரிவித்தார். நாடு முழுவதிலும் 30 பிரத்தியேக காட்சியறைகளை திறக்கும் திட்டங்களுடன், நாடு முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கும் Samsung இலங்கை திட்டமிட்டுள்ளது.

´அயராத வாடிக்கையாளர் உதவி சேவையை வழங்குவதனை நோக்கி, எமது வாடிக்கையாளர்களுக்கு வினைத்திறன் மிக்க சேவை ஒன்றினை வழங்குவதற்கு எமது சேவை நிலையங்களை நாம் வலுப்படுத்துவும், பரவலாக்கவும் உள்ளோம். மேலதிகமாக, A Series இன் நவீன சாதனஅறிமுகம், மிக விரைவில் ஆச்சரியமிகு மற்றும் புரட்சிகரகமானதாக அமையும். இலங்கையில் எமது முதலாம் இடம் என்ற நிலையை உறுதிப்படுத்தும் வகையில் எமது விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வலையமைப்புடன் எமது உறவினை மேம்படுத்தவும் நாம் திட்டமிட்டுள்ளோம்.