Back to Top

யாழ் மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

யாழ் மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

February 9, 2018  09:25 am

Bookmark and Share
யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்முறை வாக்களிப்பதற்காக 4 இலட்சத்து 68 ஆயிரத்து 476 பேர் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நேற்று (08) மாலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யாழில் 17 உள்ளூராட்சி சபைகளில் 243 வட்டாரங்களுக்கும் 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இம் முறை வட்டாரத்திற்கு ஒரு வாக்கு எண்ணும் நிலையம் வீதமே அமைக்கப்பட்டுள்ளதுடன் வட்டாரத்தின் முடிவுகள் வாக்கெண்ணும் நிலைத்தில் வைத்தே அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

இறுதி முடிவுகளானது இம் முறை இரவு 8 மணிக்கு முன்னதாகவே கிடைக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் வாக்களிப்பு நிலைய பாதுகாப்பு பணிகளுக்காக ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு இருவர் வீதம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கூடிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உள்ள மக்களுக்காக போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தூரமான பகுதிகளுக்கான போக்குவரத்து ஒழுங்களும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தெரிவத்தாட்சி அலுவலர் இம் முறை தேர்தல் கடமைகளுக்காக தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(யாழ் நிருபர் தீபன்)