Back to Top

உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் தொடர்பில் இறுதி முடிவு இன்னுமில்லை

உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் தொடர்பில் இறுதி முடிவு இன்னுமில்லை

February 12, 2018  12:40 pm

Bookmark and Share
வேறு எந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வித தீர்மானம் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போதே அவர் எமது செய்திப் பிரிவிற்கு இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்