Back to Top

 Hybrid/EV வாகன பற்றரிகளை Umicore பற்றரி மீள்சுழற்சி நிறுவனத்துக்கு விநியோகிக்கும் அங்கிகாரம் பெற்ற விநியோகத்தராக நியமனம்

Hybrid/EV வாகன பற்றரிகளை Umicore பற்றரி மீள்சுழற்சி நிறுவனத்துக்கு விநியோகிக்கும் அங்கிகாரம் பெற்ற விநியோகத்தராக நியமனம்

February 14, 2018  09:57 am

Bookmark and Share
இலங்கையின் முதல் தர இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ நிறுவனமான Green Links லங்கா, இலங்கையில் பயன்படுத்தப்பட்ட Hybrid/EV வாகன பற்றரிகளை பெல்ஜியத்தின் Umicore கம்பனிக்கு விநியோகிப்பதற்கான அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகஇ Umicore பற்றரி மீள்சுழற்சி நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் Green Links லங்கா முகாமைத்துவ பணிப்பாளர் நளின் குணரட்ன மற்றும் பெல்ஜியம் Umicore பற்றரி மீள்சுழற்சி நிறுவனத்தின் சர்வதேச வணிக மற்றும் வளங்கள் முகாமையாளர் கிஸ்லெய்ன் வான் டேம் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட Hybrid மற்றும் இலத்திரனியல் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு ஆயுள் காலத்தை பூர்த்தி செய்த நிக்கல் உலோக ஹைட்ரைட் மற்றும் லித்தியம் அயன் பற்றரிகளை Green Links லங்கா சேகரித்து, களஞ்சியப்படுத்தி வைத்திருந்து, அவற்றை மீள்சுழற்சியில் ஈடுபடுத்துவதற்காக Umicore பற்றரி மீள்சுழற்சி நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இதன் அடிப்படையில் Green Links லங்காவினால் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஹைபிரிட், ப்ளக்-இன் ஹைபிரிட் மற்றும் இலத்திரனியல் வாகனங்கள் போன்றவற்றில் பயன்படுத்திய நிக்கல் உலோக ஹைட்ரேட் மற்றும் லித்தியம் அயன் பற்றரிகள் போன்றன சேகரிக்கப்பட்டு மீள்சுழற்சிக்காக Umicore பற்றரி மீள்சுழற்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும்.

எட்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பிரகாரம், Umicore பற்றரி மீள்சுழற்சி நிறுவனத்தினால் மீள்சுழற்சி செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆலை UHT (Ultra High Temperature) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2011ல் நிறுவப்பட்டிருந்தது.

இதனூடாக பயன்படுத்திய xEV பற்றரிகளிலிருந்து எவ்விதமான கழிவுகளும் வெளியேறாமை உறுதி செய்யப்படுவதுடன், கோபால்ட், நிக்கல், செப்பு, ரெயார் ஏர்த்கள் மற்றும் லித்தியம் போன்ற உலோகங்களை நிலைபேறான மூடிய தொடர் அடிப்படையில் சுழற்சியில் உட்படுத்தும். இந்த தொழில்நுட்பத்துடன்இ 2012ல் ஐரோப்பிய வியாபார விருதுகள் வழங்கலில் வெற்றியாளராக Umicore தெரிவாகியிருந்தது.

மாபெரும் மூலப்பொருட்கள் தொழில்நுட்ப மற்றும் மீள்சுழற்சி நிறுவனமாக Umicore குரூப் திகழ்கிறது. இதில் 14000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதுடன்இ 56 தொழிற்சாலை பகுதிகளை கொண்டுள்ளது. மேலும் 20 ஆய்வு மற்றும் அபிவிருத்தி அல்லது தொழில்நுட்ப நிலையங்களை உலகளாவிய ரீதியில் கொண்டுள்ளது.

Green Links லங்கா மத்திய சூழல் அதிகார சபையின் அங்கிகாரம் பெற்ற நிறுவனமாக திகழ்வதுடன், இலங்கையில் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளையும் முன்னெடுக்கிறது. பயன்படுத்திய கணினிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள்இ LED மொனிட்டர்கள், அச்சிடும் இயந்திரங்கள்இ ஸ்கானர்கள்இ போட்டோ பிரதி இயந்திரங்கள்இ குளிர்சாதன பெட்டிகள்இ வாயு சீராக்கிகள்இ சலவை இயந்திரங்கள்இ தொலைபேசிகள்இ கையடக்க தொலைபேசிகள்இ டிஜிட்டல் கமராக்கள் மற்றும் அல்காலைன பற்றரிகள் போன்றன பசெல் அனுமதி பெற்ற சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Green Links லங்கா இதுவரையில் 6000 டொன்களுக்கு அதிகமான இலத்திரனியல் கழிவுகளை ஜப்பான்இ பிரித்தானியாஇ தென் கொரியாஇ மலேசியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இலங்கைக்கு பெருமளவு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும் வகையில் ஏற்றுமதி செய்துள்ளது.

இலங்கையில் இயங்கும் முன்னணி நிறுவனங்களான சிங்கர் ஸ்ரீ லங்கா, ஜோன் கலீஸ் மெட்ரொபொலிட்டன், வங்கிகள், முதலீட்டு சபை நிறுவனங்கள் மற்றும் 400க்கும் அதிகமான நிறுவனங்கள் இலத்திரனியல் கழிவுகளை Green Links லங்காவுக்கு விநியோகிக்கின்றன.

2005ல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த Green Links லங்காஇ நாட்டில் காணப்படும் முன்னணி இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ நிறுவனமாக விருதுகளை வென்றுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற e-கழிவு முகாமைத்துவ பயிற்சிப்பட்டறையில் சர்வதேச மட்டத்தில் காணப்பட்ட 14 நாடுகளைச்சேர்ந்த இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் Green Links முகாமைத்துவ பணிப்பாளர் நளின் குணரட்ன அவர்களும் உள்ளடங்கியிருந்தார்.

நளின் குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், ´பழைய சைலன்சர்கள் சேகரிப்புடன் Green Links நிறுவனத்தின் செயற்பாடுகளை நாம் ஆரம்பித்திருந்தோம். தற்போது உலகின் முன்னணி e-கழிவு முகாமைத்துவ நிறுவனங்கள் எமது செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டுஇ எம்மீது நம்பிக்கை வைத்து, தமது நம்பிக்கைக்குரிய விநியோகத்தராக எம்மை இணைத்துள்ளனர்´ என்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ´அண்மைக் காலங்களில், கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் மாபெரும் கழிவு கொட்டும் பகுதியால் பெரும் பிரச்சினை எழுந்திருந்தது. எதிர்காலத்தில் இலத்திரனியல் கழிவுகள் ஒன்று சேர்வதன் மூலமாக நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுகிறது.

எனவே, தமது ந-கழிவுகளை எம்மிடம் ஒப்படைத்து சூழலுக்கு நட்பான குடிமக்களாக திகழுமாறு நாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அவர்களின் செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுக்கக்கூடிய வகையில் நாம் நடமாடும் வாகன சேவை ஒன்றை கொண்டுள்ளோம். எமது ஹொட்லைன் இலக்கமான 011 5660300 உடன் தொடர்பு கொண்டு அல்லது பிரத்தியேகமாக எமது 848/3A மாபோல, வத்தளை எனும் முகவரியில் அமைந்துள்ள எமது களஞ்சியசாலைக்கு விஜயம் செய்து தமது இலத்திரனியல் கழிவுகளை ஒப்படைக்கலாம்.´ என்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ´வெளிப்பிரதேசங்களில் வசிப்போருக்கு உதவிகளை வழங்குவது பற்றியும் நாம் கவனம் செலுத்துகிறோம். அவர்களும் எம்மை தொடர்பு கொள்ளலாம். இருந்த போதிலும்இ இலத்திரனியல் கழிவுகளை ஒப்படைக்கும் போதுஇ அவற்றின் உள்ளே காணப்படும் உதிரிப்பாகங்களை அகற்ற வேண்டாம் எனவும் நாம் தாழ்மையுடன் கோருகிறோம், அவை இருந்தால் தான் எம்மால் மள்சுழற்சிக்காக அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும்´ என்றார்.

Most Viewed