Back to Top

சுழல் காற்றினால் படல்கம பகுதியில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் மக்களின் 65 வீடுகளை புனரமைக்க Sirio லிமிட்டெட் நிதி உதவி

சுழல் காற்றினால் படல்கம பகுதியில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் மக்களின் 65 வீடுகளை புனரமைக்க Sirio லிமிட்டெட் நிதி உதவி

February 14, 2018  10:16 am

Bookmark and Share
படல்கமயில் தனது தொழிற்சாலையை கொண்டியங்கும் முன்னணி ஆடைகள் ஏற்றுமதி நிறுவனமான Sirio, தனது மாபெரும் சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சியை அண்மையில் முன்னெடுத்திருந்தது.

படல்கம பகுதியில் அண்மையில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று காரணமாக மோசமாக பாதிப்படைந்த 65 வீடுகளை புனரமைப்பு செய்வதற்கு Sirio லிமிட்டெட் தனது நிதி உதவிகளை வழங்கியிருந்தது. இதில் Sirio நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் இல்லங்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தகக் து.

இந்த நிதி உதவிகளை வழங்கும் நிகழ்வு Sirio நிறுவன வளாகத்தில் நடைபெற்றதுடன், இதில் Sirio பிரதம நிறைவேற்று அதிகாரியும், ஒமெகா லைன் குழும பணிப்பாளருமான பீலிக்ஸ் ஏ பெர்னான்டோ, திவுலபிட்டிய பிரதேச செயலாளர் எச் எம் எல் எஸ் ஹேரத், கட்டுகெந்த கிராம சேவகர் ஜே பி ஐ எல் ஜயக்கொடி மற்றும் படல்கம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி கோலித ரணதுங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Sirio நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஒமெகா லைன் குழும பணிப்பாளருமான பீலிக்ஸ் ஏ பெர்னான்டோ, ஜனவரி 12ம் திகதி திடீரென ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானத்துக்கமைய இந்த சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Sirio லிமிட்டெட் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடியிருந்தனர். இதில் Sirio நிறுவனத்தின் ஊழியர்களும் அடங்கியிருந்தனர். இதனூடாக பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பு செய்வதற்கு சராசரியாக ஏற்படும் செலவீனம் குறித்து ஆராயப்பட்டிருந்தது.

நிதி உதவிகள் மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்டிருந்தன. முதல் பிரிவில், கட்டுகெந்த, மெனிக்வத்த, திக்லந்த, ஹீரலுகெதர, அகலெகெதர மற்றும் பெதிகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 Sirio ஊழியர்களின் வீடுகளை முழுமையான புனரமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இரண்டாம் பிரிவில், குறித்த வளாகத்தில் பாதிக்கப்பட்ட 15 வீடுகளை புனரமைப்பு செய்வதற்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

மூன்றாம் பிரிவில் கட்டுகெந்த கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 23 குடும்பங்களின் பாதிக்கப்பட்ட வீடுகளை புனருத்தாரணம் செய்வதற்கு அவசியமான நிதி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. (இந்த பகுதியில் Sirio நிறுவனம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது). இந்த பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக குடிசைகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திவுலபிட்டிய பிரதேச செயலாளர் எச் எம் எல் எஸ் ஹேரத் மேற்கொண்டிருந்த கோரிக்கையின் பிரகாரம், ளுசைழை லிமிட்டெட் நிறுவனத்தினால் வறுமையான தாய் மற்றும் அவரின் மாற்றுத்திறன் வாய்ந்த பிள்ளைக்கும் அவர்களின் பாதிக்கப்பட்ட வீட்டை மீளமைத்துக் கொள்வதற்கு 100,000 ரூபாயை வழங்கியிருந்தது.

மேலும், ஜனவரி 12ம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு பத்து தினங்களுக்கு காலை, மதிய மற்றும் இரவு உணவு வேளைகள் தொடர்ச்சியாக பத்து தினங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்த சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைக்காக நிறுவனம் மொத்தம் 1.2 மில்லியன் ரூபாயை செலவிட்டிருந்தது.

இந்த செயற்திட்டம் தொடர்பில் பீலிக்ஸ் ஏ பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், ´ஜனவரி 12ம் திகதி துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதனால் பெருமளவு சேதங்கள் வீடுகளுக்கும் எமது நிறுவனத்துக்கும் ஏற்பட்டன. இந்த அனர்த்தத்தின் போது, எமது நிறுவனத்தை சூழவுள்ள இளைஞர்கள் எந்தளவுக்கு எமது நிறுவனத்தின் மீது கரிசனை கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிந்தது. மின்சார இழப்பு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வீதி தடைகள் மற்றும் மின்சார வயர்கள் பாதிக்கப்பட்டதால் எமக்கு இழப்புகள் ஏற்பட்டன. எமது பல ஊழியர்கள் நிறுவனத்தில் அடைபட்டிருந்தனர். அவர்களால் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் துரிதமாக செயலாற்றி வீதிகளில் போக்குவரத்தை மேற்கொள்ள சரீ செய்திருந்தனர் என்றார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ´படல்கம பிரதேச மக்களுக்கும் Sirio நிறுவனத்துக்குமிடையிலான இந்த பரஸ்பர புரிந்துணர்வு காரணமாக, நாம் எப்போதும் இந்த மக்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க ஆர்வத்துடன் முன்வந்துள்ளோம். இதன் காரணமாக நாம் உடனடியாக செயலாற்றி, பாதிக்கப்பட்ட இல்லங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.

இந்த செயற்பாட்டை முன்னெடுக்க எமது தலைவர் வின்சென்சோ ஜொப்பொலோ மற்றும் Calzedonia இத்தாலி நிறுவன தலைவர் டொட். சான்ட்ரோ வெரேநெசி ஆகியோர் தமது உடனடியாக இடையீட்டை வழங்கியிருந்தமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எமது நிறுவனத்தின் பல அங்கத்தவர்கள் கடுமையாக உழைத்து, தமது அயலவர்களுக்கு நிவாரணத்தை வழங்கியிருந்தனர். அவர்களையும் நான் மதிக்கிறேன´; என்றார்.

படல்கம Sirio லிமிட்டெட், இத்தாலியின், வெரோனா நகரில் அமைந்துள்ள Calzedonia S.p.A குழுமத்தின் துணை நிறுவனமாகும். உள்ளாடைகள், காலுறைகள், ஸ்டொக்கிங்கள், குளியல் ஆடைகள் மற்றும் ஆடை வர்ணங்கள் உற்பத்தி போன்றவற்றில் இந்நிறுவனம் உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழ்கிறது.

Calzedonia S.p.A நிறுவனத்தின ; ஏனைய உள்நாட்டு நிறுவனங்களில் ஒமெகா லைன் (சந்தலங்காவ மற்றும் வவுனியா), அல்பா அப்பரல்ஸ் (பொல்கஹாவலை), பென்ஜி (பிங்கிரிய) மற்றும் ளுசைழை (படல்கம) ஆகியன அடங்கியுள்ளன. உள்நாட்டு நிறுவனங்களில் மொத்தமாக 13000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகிய பிராந்தியங்களில் ஊயடணநனழnயை நிறுவனம் விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.

Most Viewed