Back to Top

ReeBonn கொஸ்மெட்டிக்ஸ் இனால் ‘ReeBonn Fairness Body Lotion’அறிமுகம்

ReeBonn கொஸ்மெட்டிக்ஸ் இனால் ‘ReeBonn Fairness Body Lotion’அறிமுகம்

February 14, 2018  10:26 am

Bookmark and Share
இலங்கையில் முன்னணி மூலிகை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ReeBonn கொஸ்மெடிக்ஸ், தனது மற்றுமொரு புதிய தயாரிப்பான ´ReeBonn Fairness Body Lotion´ஐ உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

பாவனையாளர்களுக்கு பளபளப்பான, மென்மையான மற்றும் பிரகாசமான சருமத்தை வழங்கும் வகையில் இந்த தயாரிப்பு அமைந்துள்ளது. முழு சருமத்துக்கும் பிரகாசத்தையும், பளபளப்பான தன்மையையும் வழங்கும் வகையில் இந்த தயாரிப்பு அமைந்துள்ளது.

´ReeBonn Fairness Body Lotion’ இல் மூலிகை சேர்மானம் செறிந்து காணப்படுவதுடன், விற்றமின் E மற்றும் B ஆகியனவும் அடங்கியுள்ளன. இவை சருமத்தை புறஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து, பிரகாசம், மென்மை மற்றும் பளபளப்பு ஆகிய மூன்று தன்மைகளை சேர்க்கிறது.

பயன்படுத்துபவரின் முகம் முதல் முழு உடலுக்கும் ஒரே விதமான பளபளப்பை வழங்கக்கூடிய தன்மை இந்த தயாரிப்பில் காணப்படும் விசேட அம்சமாக அமைந்துள்ளது.

ReeBonn Fairness Body Lotion தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அரிய மூலிகை மற்றும் பழ சேர்மானத்தின் மூலமாக, நாள் முழுவதிலும் நபர் ஒருவரின் சருமத்தின் ஈரப்பதனை பேண உதவியாக அமைந்துள்ளது. எனவே, இந்த தயாரிப்பு பெண்களுக்கு தமது பொழுதை பெருமளவில் வெளிப்பகுதியில் செலவிட உதவியாக அமைந்திருக்கும். மேலும், முகத்துக்கு நிகரான பளபளப்பை தமது உடலிலும் பேணுவதில் சிக்கல்களை எதிர்கொள்வோருக்கு இது பெரிதும் உதவியாக அமையும்.

ReeBonn Fairness Body Lotion தயாரிப்பு தடிப்பு தன்மை குறைவு என்பதுடன், ஒட்டாத தன்மை கொண்டுள்ளதால், இனிய நறுமணத்தை கொண்ட இந்த தயாரிப்பை பெண்கள் பயன்படுத்திய பின்னர் நாள் முழுவதும் வெளி பகுதியில் எவ்வித சிக்கல்களுமின்றி திகழலாம்.

ReeBonn Cosmetics நிறுவனம் இலங்கையர்களுக்கு பெருமளவு உலகத்தரம் வாய்ந்த அழகியல் தயாரிப்புகளை வழங்கியுள்ளது. இவற்றினூடாக பெண்களின் அழகு, சருமத்தின் வர்ணம் மற்றும் கூந்தல் வளர்ச்சி போன்றன மேம்படுத்தப்பட்டுள்ளன.

ReeBonn கொஸ்மெடிக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். சிவராஜா கருத்துத் தெரிவிக்கையில், ReeBonn நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் நாட்டில் நிலவும் காலநிலை மற்றும் வானிலை போன்றன கவனத்தில் கொள்ளப்பட்ட பின்னர் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் இலங்கை பெண்களின் சருமம் மற்றும் கூந்தல் நிலைகள் பற்றிய ஆய்வுகளும் தயாரிப்பை உற்பத்தி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டு தயாரிப்புகளின் உற்பத்தி செயற்பாடுகளின் போது அவையும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன´ என்றார்.

´எமது நிறுவனம் அழகை மேம்படுத்தக்கூடிய ஆயுரவேத மூலிகை மற்றும் பழ சேர்மானங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது. இலங்கை வெப்ப வலய நாடு எனும் வகையில், ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் அழகுசாதனப்பொருட்கள் இலங்கை பெண்களுக்கு பொருத்தமானதாக அமைந்திருக்காது. தமது அழகுசாதன பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு சரியான பதில்களை எம்மிடம் எதிர்பார்க்கின்றனர். ´ReeBonn Fairness Body Lotion´ என்பது இதற்கு சரியான பதிலாக அமைந்துள்ளது. முகத்துக்கும் உடலுக்கு ஒரே விதமான பளபளப்பை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். கடுமையான சூரிய ஒளிகளுக்கு வெளிப்படுத்தப்படும் போது உணர்திறன் வாய்ந்த சருமங்கள் வரண்டு போகின்றன. இதற்கு தீர்வாக ´ReeBonn FairnessBody Lotion அமைந்துள்ளது´ என்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ´எமது ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வு செயற்பாடுகளினூடாக, கடுமையான சூரிய ஒளி மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமங்களை பாதுகாக்கும் வகையில் இந்த தயாரிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது´ என்றார்.

2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ReeBonn கொஸ்மெடிக்ஸ் பிரைவட் லிமிடெட், பரந்தளவு மூலிகை அழகுசாதன தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. இவற்றுக்கு சிறந்த கேள்வியும் சந்தையில் காணப்படுகிறது. இந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் மூலிகைப்பொருட்களில், shampoo, silicon conditioner, Rinsing conditioner, Black henna, Face wash, Fairness cream, Body soap மற்றும் Hand wash liquids போன்றன அடங்கியுள்ளன. ReeBonn கொஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள் ஜப்பான், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் மாலைதீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.