Back to Top

2018ம் ஆண்டு வெற்றியின் ஆரம்பத்தில் செலிங்கோலைஃப் வாடிக்கையாளர்கள்

2018ம் ஆண்டு வெற்றியின் ஆரம்பத்தில் செலிங்கோலைஃப் வாடிக்கையாளர்கள்

February 14, 2018  10:40 am

Bookmark and Share
ட்ரெவி நீர்வீழ்ச்சியில் ஒரு ஷெல்பி, பண்டைய கொலோஸியத்துக்கு ஒரு விஜயம், மைக்கலஞ்சலோவின் சிறந்த படைப்புக்களோடு ஒரு புகைப்பட போஸ் இவை உற்பட ரோம் நகரின் இன்னும் எத்தனையோ கவர்ச்சிகளைக் கண்டு களிக்கும் ஒரு வாய்ப்பு செலிங்கோலைஃப்பின் 11வது குடும்ப சவாரி மாபெரும் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனமடுவ, வெள்ளவத்தை, வென்னப்புவ, தம்புத்தேகம மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து செலிங்கோலைஃப் வாடிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குடும்ப சவாரி பாரிய சீட்டிழுப்பின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட இவர்களுக்கு சகல செலவுகளுடனும் நிறுவனத்தால் பொறுப்பேற்று இந்த விடுமுறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து குடும்பங்கள் சீனாவுக்கும், 25 குடும்பங்கள் சிங்கப்பூருக்கும் செல்லும் வாய்ப்பையும் மற்றும் 725 குடும்பங்கள் லெஷர் வேர்ள்ட்டில் ஒருநாள் உல்லாசப் பயணம் அனுபவிக்கும் வாய்ப்பையும் இந்த சீட்டிழுப்பு வழங்கியுள்ளது.

இந்த வெற்றியாளர்களோடு ஊக்குவிப்பின் நடுப்பகுதியில் இடம்பெற்ற சீட்டிழுப்பின் மூலம் தெரிவுசெய்யபடட் 25 குடும்பங்கள் சிங்கப்பூர் செல்ல இணைத்துக் கொள்ளப்படுவர். மேலும் 275 குடும்பங்கள் லெஷர் வேள்ட் பயணத்தில் இணைந்து கொள்வர். இவ்வாண்டுமே மற்றும் ஜுன் மாதக் காலப்பகுதியில் இந்த உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாக்கள் அனைத்தும் இடம்பெறும்.

செலிங்கோலைஃப்பின் இவ்வாண்டு குடும்ப சவாரி திட்டத்தின் மூலம் 1065 வாடிக்கையாளர் குடும்பங்களைச் சேர்ந்த 4260 பேர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணங்களுக்கான வாய்ப்பை வென்றுள்ளனர். இதன் மூலம் இன்றுவரை இந்தத் திட்டத்தின் ஊடாகநன்மை அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 24000 மாக அதிகரித்துள்ளது.

´குடும்ப சவாரி திட்டத்தின் முதலாவது தசாப்தகாலம் செலிங்கோலைஃப் நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் மறக்க முடியாத ஒரு காலப் பகுதியாகும்´ என்று கூறினார் செலிங்கோலைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன். ´எமது வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளைப் பேண இது ஒரு புதிய முன்னுதாரணமாக மாறிவிட்டது. இந்த அடிப்படையில் குடும்ப சவாரியின் 11வது அங்கத்தில் நன்மை அடைவோரின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டு செயற்பட்டுள்ளோம்´ என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் செலிங்கோலைஃப் அதன் குடும்ப சவாரி திட்ட பாரிய ஊக்குவிப்பு சீட்டிழுப்பின் மூலம் ஜப்பான் (2014) சுவிட்ஸர்லாந்து (2015) ஜெர்மனி (2016), இங்கிலாந்து (2017), ரோம் (2018) என தனது வாடிக்கையாளர்களுக்கு உலகின் பிரபலமானபல இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பை வழங்கியுள்ளது. ஓவ்வொரு வருட ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆரம்பத்தின் போது அந்த ஆண்டில் புதிதாக இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள இடம் எது என அறிந்துகொள்ளும் ஆர்வம் வாடிக்கைகாளர்கள் மத்தியில் மேலோங்கிஉள்ளது.

குடும்ப சவாரி 11 வது அங்கத்துக்கான ஊக்குவிப்பு காலம் 2017 டிசம்பரில் முடிவடைந்தது. செயற்படு நிலையில் உள்ள நீண்டகால ஆயுள் காப்புறுதி கொள்கைகளை வைத்திருப்பவர்கள், செலிங்கோலைஃப் ஓய்வூதியக் கணக்குத் திட்டத்தை வைத்திருப்பவர்கள், புதிய ஆயுள் காப்புறுதியைப் பெற்று மூன்று மாகாலம் தொடர்ந்து கட்டுப்பணம் செலுத்தியவர்கள் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டு அதிர்ஷ்டத்தை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படும். அவர்களின் ஆயுள் காப்புறுதியின் அளவைப் பொருத்து, அல்லது ஓய்வூதியக் கணக்கில் உள்ள மீதியைப் பொருத்து சில வாடிக்கையாளர்களுக்கு மூன்று வெளிநாட்டுப் பயணத் திட்த்திற்குமான அதிர்ஷ்ட வாய்ப்புவழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் கம்பனி மீது கொண்டுள்ள நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில் வாடிக்கையாளர்கள் செலிங்கோலைஃப்புடன் காப்புறுதியினைக் கொண்டுள்ள காலத்தின் படி ஒவ்வொருவருடத்துக்கும் மேலதிக வெற்றி வாய்ப்பு ஒன்றும் வழங்கப்படும். இதன்படி ஆகக் கூடியது 15 மேலதிக வெற்றி வாயப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கும். இவற்றுக்குலேதிகமாக வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சம் மூன்று கட்டுப்பண கொடுப்பனவுகளை நேரடி கொடுப்பனவுத் திட்டத்தின் மூலம் (வங்கி நிலையியல் ஆணை) செலுத்தும் பட்சத்தில் மேலதிக வெற்றி வாய்ப்பும் வழங்கப்படும்.

செலிங்கோலைஃப் குடும்ப சவாரியின் ஊக்குவிப்பில் நான்கு பிரபலங்கள் வியாபார குறிட்டு தூதுவர்களாக பங்கேற்கின்றனர். நடிகர் சிறியன்த மெண்டிஸ், சஞ்சீவனி வீரசிங்க, றொஷான் றனவன அவரின் மனைவி குஷ்லானி ஆகியோர் வாடிக்கையாளர்களுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்பர்.

2004 முதல் இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோலைஃப் சுமார் பத்து லட்சம் செயற்படு நிலையில் உள்ள ஆயுள் காப்புறுதிகளைக் கொண்டுள்ளது. உள்ளுர் ஆயுள் காப்புறுதித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்கும் இது புகழ் பூத்த நிறுவனமாகும்.

Most Viewed