Back to Top

64 மாணவர்களின் பெற்றோர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

64 மாணவர்களின் பெற்றோர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

February 14, 2018  01:08 pm

Bookmark and Share
மினுவாங்கொட, ரெஜி ரணதுங்க ஆரம்ப பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் 125 புள்ளிகளை விட குறைவான புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட 64 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இன்று (14) மினுவாங்கொட - கொழும்பு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மினுவாங்கொட - கொழும்பு வீதியில் வாகனப் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 125 புள்ளிகளை விட குறைவான புள்ளிகளைப் பெற்ற 64 மாணவர்களை மினுவாங்கொட, ரெஜி ரணதுங்க விஞ்ஞான கல்லூரிக்கு இணைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காததன் காரணமாக அந்த மாணவர்களின் பெற்றோர் மினுவாங்கொட பாபலவத்தை பிரதேசத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

125 புள்ளிகளை விட அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அந்தப் பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமது பிள்ளைகளை அந்தப் பாடசாலையில் இணைத்துக் கொள்ள நிர்வாகம் நடவடிக்கை எடுக்வில்லை என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர்.