Back to Top

கிராண்பாஸில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் 07 ஆக அதிகரிப்பு

கிராண்பாஸில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் 07 ஆக அதிகரிப்பு

February 14, 2018  05:10 pm

Bookmark and Share
கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, கிராண்பாஸ் பபாபுள்ளே மாவத்தையில் தேயிலை களஞ்சியப்படுத்தி வைக்கும் பழமையான கட்டிடம் ஒன்று இன்று மாலை இடிந்து விழுந்தது.

பின்னிணைப்பு - 5.30 பி.ப

கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 பேராக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Most Viewed