Back to Top

லசன்த விக்ரமதுங்க கொலை சம்பவம்; முன்னாள் சிரேஷ்ட DIG விளக்கமறியலில்

லசன்த விக்ரமதுங்க கொலை சம்பவம்; முன்னாள் சிரேஷ்ட DIG விளக்கமறியலில்

February 14, 2018  05:59 pm

Bookmark and Share
ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நானயகார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லசன்த விக்ரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் பிரசன்ன நானயகார நேற்று இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து இன்று கல்கிஸ்ஸ நீதவான் நிதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக எமது அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கல்கிஸ்ஸ நீதவான் நிதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாய்ல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Most Viewed