
சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கான பால்நிலை வன்முறை அறிக்கை
May 30, 2018 11:21 am
ஏசியா புலோர் வேஜ் எலையன்ஸ் (ஏ.எப்.டபிள்யூ.ஏ.), சென்ரல் கம்போடியா மற்றும் குளோபல்
லேபர் ஜஸ்டிஸ் உள்ளடங்கலாக தொழிற்சங்கங்கள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள்
அமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பானது, வோல்மார்டடின் ஆசிய ஆடைக் கைத்தொழிற்சாலை விற்பனைச்
சங்கிலியில் இடம்பெறும் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை தொடர்பான விடயங்களை
விபரிக்கின்ற ஆடைக் கைத்தொழிற்சாலை மட்டத்திலான ஆய்வின் அறிக்கையொன்று இன்று (30)
வெளியிடப்பட்டது.
ஆடைக் கைத்தொழிற்சாலையிலுள்ள பெண் தொழிலாளர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும்
வன்முறை மற்றும் துன்புறுதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வோல்மார்டினால் உடனடி செயற்பாடு
மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் முக்கியத்துவமிக்க செயற்பாடுகளின் பின்னர், பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட
வன்முறை தொடர்பில் சர்வதேச தொழிலாளர் நியமங்களை உருவாக்குவதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு
இணங்கியுள்ளது. அரசாங்கங்கள் மற்றும் வியாபாரங்கள் என்பவற்றுடன் இணைந்து உலகம் பூராகவுமுள்ள
தொழிற்சங்கத் தலைவர்கள் ஒவ்வொரு துறையிலுமுள்ள பெண்களைப் பாதுகாக்கும் உலகளாவிய நியமங்களை
உருவாக்குவதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக சந்திக்கவுள்ளது. இந்தக்
கலந்துரையாடலைப் பற்றி அறிவிப்பதற்கும் குறைந்த வருமானம் பெறும் பெண் தொழிலாளர்களின்
அனுபவத்தையும் பரிந்துரைகளையும் உறுதிப்படுத்துவதற்கும் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
2018 ஜனவரி முதல் 2018 மே வரையான காலப்பகுதியில் டாக்கா, பங்களாதேஷ் பெனொம் பென்,
கம்போடியர், மேற்கு ஜாவா, இந்தோனேஷியா என்பவற்றில் வோல்மார்ட் ஆடைகளை விநியோகிக்கும்
கைத்தெழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை தொடர்பான
புலன் விசாரணைகளை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
இந்த ஆய்வு, பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இடர் காரணிகள் என்பவற்றின் விஸ்தீரணத்தை விளங்கிக் கொள்வதற்கும் வேலைத்தள வன்முறை தொடர்பான பயிற்சி மற்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்ட கருத்துரைப்பு என்பவற்றை உள்ளடக்கிய தற்போதைய அணுகுமுறையினூடாக பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைக்குப் பதிலிறுப்பதற்கு இந்தத் தகவலைப் பயன்படுத்துவதற்கும் முயற்சிக்கிறது.
வோல்மார்ட் ஆடைக் கைத்தொழிற்சாலையின் உலகளாவிய விற்பனைச் சங்கிலியில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இத்துறையில் ஒட்டுமொத்தமாக ஏசியா புலோர் வேஜினால் மேற்கொள்ளப்பட்ட ஐந்து தீர்ப்பாயங்கள் என்பவற்றை ஆவணப்படுத்திய 2016 அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை
கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்களும் வன்முறையும் மற்றும் உடலியல் ரீதியான வன்முறை, வாய்மூலமான
துஷ்பிரயோகம், கட்டாயப்படுத்தல், அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் உள்ளடங்கலான
கைத்தொழிற்சாலையிலுள்ள ஒழுங்கற்ற நடைமுறைகள் மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட மேலதிக வேலைநேரம்
உட்பட சுதந்திரம் தடுக்கப்படும் நிலைமைகள் என்பன பெண் தொழிலாளர்களினால்
அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளன.
இவை புறக்கணிக்கப்பட வேண்டிய சம்பவங்களன்று, மாறாக வோல்மார்ட் ஆடைக்
கைத்தொழிற்சாலை விற்பனைச் சங்கிலியில் இடம்பெறும் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட
வன்முறையானது வோல்மார்ட் எவ்வாறு தனது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதன் நேரடி
பெறுபேறாகும்.
இந்த அறிக்கைகளுக்கு பதிலிறுக்கும் வகையில், ஏசியா புலோர் வேஜ் எலையன்ஸின் பெண்களின் தலைமைத்துவக்
குழு பின்வரும் மூன்று உடனடி செயற்பாடுகளை வோல்மார்டிடம் கோருகின்றது:
1. ஏசியா புலோர் வேஜ் எலையன்ஸ் மற்றும் அவர்களது பங்குதாரர்களின் பரிந்துரைகள் உள்ளடங்கலாக
பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை தொடர்பான ஐ.எல்.ஓ சமவாயத்தின் பரிந்துரைகளை
முன்னாயத்தமாக நடைமுறைப்படுத்த பகிரங்கமாக ஆதரவையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தல்.
2. விற்பனைச் சங்கிலியின் கண்டறிதல்கள் மற்றும் அடுத்த கட்ட படிநிலைகள் என்பவற்றைப் பற்றிக்
கலந்துரையாடுவதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ஏசியா புலோர் வேஜின் பெண்களின் தலைமைத்துவக்
குழுவினால் ஒழுங்கமைக்கப்படும் ஆசிய பிராந்தியக் கூட்டங்களில் சந்தித்தல்.
3. பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை மற்றும் விற்பனைத் தொழிற்சாலைகளிலிருந்து
வரும் பாரபட்சங்கள் என்பவற்றை இல்லாதொழிக்கக் கூடிய தொழிற்சாலையிலுள்ள பெண்களின்
குழுக்களை முற்சோதனை செய்வதற்கு ஏசியா புலோர் வேஜூடன் முன்னாயத்தமாகப் பணியாற்றல்.
வோல்மார்ட்டானது, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அதன் பங்குதாரர்கள் கூட்டத்துக்காக பல்வேறு
செயற்பாடுகளைத் தயார் செய்வதுடன், உலகளாவிய பொறுப்புணர்வு தொடர்பாக அறிக்கையொன்றை இந்த
வருடத்தின் ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தது.
2018 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி காலை செயற்பாட்டுக்கான கோரிக்கையுடன் வோல்மார்ட்டிற்கு அனுப்பப்பட்ட அறிக்கைகளின் பின்னர் வோல்மார்ட்டிடமிருந்து பொருத்தமான பதிலொன்று இன்னும் வர வேண்டியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்களுக்காக வோல்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஆதரவு
நல்குமாறு ரைம்ஸ் அப் சட்ட பாதுகாப்பு நிறுவனத்திடம் வோல்மார்ட்டில் மதிப்பைப் பெறுவதற்காக
ஐக்கியப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து ஐக்கிய அமெரிக்காவிலுள்ள கடைகளிலுள்ள வோல்மார்ட் பணியாளர்கள்
கோரியுள்ளனர்.