Back to Top

தொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை வழங்கும் oDoc

தொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை வழங்கும் oDoc

January 21, 2021  01:46 pm

Bookmark and Share
நாட்டில் சுகாதார பராமரிப்பு app ஐ அறிமுகம் செய்த முதல் நிறுவனமான oDoc, நாட்டின் வியாபார ஸ்தாபனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கும் உயர்தர ஒன்லைன் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தியுள்ளது.

வியாபாரங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை இலக்காகக் கொண்டு oDoc இனால் வியாபார சேவைகளுக்கு வழங்கப்படும் சேவையினூடாக ஊழியர் ஒருவருக்கும் அவரின் 3 குடும்ப அங்கத்தவர்களும் வரையறைகள்ள மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாதாந்தம் 60 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தை வழங்குகின்றது. ஹேஷான் பெர்னான்டோ வைத்தியர். ஜனக விக்ரமசிங்க சொஹான் தர்மராஜா மற்றும் கீத் டி அல்விஸ் ஆகியோர் இணைந்து 2017 ஆம் ஆண்டு நிறுவியிருந்த oDoc, படிப்படியாக வளர்ச்சியடைந்துரூபவ் 200,000 க்கும் அதிகமான பாவனையாளர்களை தன்வசம் கொண்டுள்ளது. இதனூடாக அதன் நம்பத்தகுந்த சேவை மட்டம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்த சேவையின் பெறுமதி மேலும் உணரப்பட்டிருந்ததுடன் புதிய பாவனையாளர்கள் பதிவுகளில் 474% அதிகரிப்பு வைத்திய ஆலோசனைகளில் 296% அதிகரிப்பு மருந்துப் பொருட்கள் ஓடர் செய்வதில் 107% அதிகரிப்பு மற்றும் B2B வருமானத்தில் ஒட்டு மொத்தமாக 100% அதிகரிப்பு பதிவாகியிருந்தது.

இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேஷான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், ´சுகாதார பராமரிப்பு சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்வது, சகாயத்தன்மை மற்றும் பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்த எமது செயற்பாடுகளை இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் முன்னெடுக்கின்றோம். இதுவரையில் தமது ஊழியர்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எம்முடன் 65 நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. அதில் AIA insurance, HNB, Crystal Martin மற்றும் Brandix போன்றன சிலவாகும்.´ என்றார்.

ஹேஷான் மேலும் தெரிவிக்கையில், ´ஆர்வமுள்ள சுகாதார பராமரிப்பு துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை நாம் அவதானித்திருந்தோம். தமது ஊழியர்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகரூபவ் பல நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்தச் சேவையுடன் தம்மைப் பதிவு செய்துள்ளன. இது தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேவையாக அமைந்துள்ளது. கூட்டாண்மை நிறுவனங்களின் பாரிய சொத்தாக திகழும் ஊழியர்களின் நலனில் அவை முதலிடுகின்றன.´ என்றார்.

பல்வேறு தொழிற்சாலைகளில் காணப்படும் மருத்துவ அல்லது சுகயீனமுற்றோருக்கான ஓய்வு அறைகளில் oDoc app செயற்படுத்தப்பட்ட tab போன்ற டிஜிட்டல் சாதனங்களை நிறுவும் விசேட ஏற்பாடுகளை oDoc மேற்கொண்டுள்ளது. களத்தில் oDoc வசதியை பயன்படுத்துவதற்கு தாதியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரகாரம், ஊழியர்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்றுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமது ஸ்மார்ட் சாதனங்களில் app ஐ பதிவிறக்கம் செய்து இந்தச் சேவையை பயன்படுத்த முடியும். எமது 42% ஆன செயலிலுள்ள b2bபாவனையாளர்கள் இந்தத் தொற்றுப் பரவலின் போது தம்மைப் பதிவு செய்து கொண்டவர்களாவர்.

இலங்கையில் காணப்படும் முதல்தர சுகாதாரப் பராமரிப்பு app ஆக oDoc அமைந்துள்ளதுடன் 1000 க்கும் அதிகமான SLMC, இல் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் 60 க்கும் அதிகமான விசேட சிகிச்சைகளுக்கான தயார்நிலையிலுள்ள வைத்தியர்களை அணுகும் வசதியை வாரத்தின் ஏழு நாட்களிலும் எந்நேரத்திலும் 3 நிமிடங்களினுள் வழங்குகின்றது. வைத்தியர் ஆலோசனைகளை எந்தவித மேலதிக கட்டணங்களுமின்றி நிறுவனசார் பாவனையாளர்கள் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்தச் சேவையை பெற்றுக் கொள்வதற்குரூபவ் மாதாந்தம் 15000 ரூபாய் எனும் அடிப்படைக் கட்டணத்தில் வருடமொன்றுக்கு நிறுவனங்கள் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அப்பாலும் இதன் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியா, மாலைதீவுகள் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் பெற்றுக் கொள்ளலாம்.