Back to Top

போராட்டம் ஆரம்பம் ! (நேரடி காட்சிகள்)

போராட்டம் ஆரம்பம் ! (நேரடி காட்சிகள்)

July 9, 2022  10:27 am

Bookmark and Share
அரசுக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் - பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு - கொழும்பு செத்தம் வீதி பகுதியில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்.

(பின்னிணைப்பு - 11:08 am)

கொழும்பு செத்தம் வீதி பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் 2 ஆவது தடவையாக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

(பின்னிணைப்பு - 11.42 am)

நடைபெறும் போராட்டத்தில் 5 பொதுமக்கள் 2 பொலிஸார் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

(பின்னிணைப்பு - 12.29 pm)

கொழும்பு ஜனாதிபதி மாவத்தை பகுதியில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மீண்டும் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

(பின்னிணைப்பு - 12.59 pm)

தற்போது கொழும்பில் நடைபெறும் போராட்டத்தில் 2 பொலிஸார் உள்ளடங்கலாக 23 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

(பின்னிணைப்பு - 1.08 pm)

பலத்த பாதுகாப்பையும் மீறி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்.

(பின்னிணைப்பு - 1.24 pm)

போராட்டத்தில் இதுவரை 31 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.