Back to Top

பிரித்தானிய பெண்ணை தேடி விசாரணை!

பிரித்தானிய பெண்ணை தேடி விசாரணை!

August 18, 2022  11:24 am

Bookmark and Share
விசா ரத்து செய்யப்பட்டுள்ள பிரித்தானிய பிரஜையான Kayleigh Fraser ஐ தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது அவர் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்த குறித்த பெண்ணின் விசா இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஒகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறுமாறும் குடிவரவு திணைக்களம் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு Kayleigh Fraser மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீதிமன்றம் அதனை நிராகரிக்க நடவடிக்கை எடுத்தது.

அதற்கமைய, அவர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அவர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படவில்லை என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் தற்போது சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியுள்ளதாகவும், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.