Back to Top

தெரண கலையகத்திற்கு வருகை தந்த மாணவர்கள்

September 9, 2022  06:03 pm

Bookmark and Share


ஹம்பாந்தோட்டை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்றைய தினம் (08) தெரண ஊடக வலையமைப்பிற்கு வருகை தந்திருந்தனர்.

தெரண ஊடக வலையமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ மடவளவின் அழைப்பின் பேரில் சுற்றிலா ஒன்றிற்காக குறித்த மாணவர் குழுவினர் வருகை தந்திருந்தனர்.

90 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் இதன்போது வருகை தந்திருந்தனர்.

இங்கு வருகை தந்த மாணவர்கள் எமது கலையகங்கள் மற்றும் ஔிப்பதிவு நடவடிக்கைகளை கண்டு களித்துடன் ஊடக கல்வி தொடர்பான பல விடயங்களையும் அறிந்து கொண்டனர்.

அத்துடன் தெரண ஊடக வலையமைப்பு தொடர்பான தவறான அபிப்பிராயங்கள் தொடர்பில் தௌிவு கிடைத்தாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.