Back to Top

250வது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூட அன்பளிப்பின் மூலம் டிஜிட்டல் இலங்கையை வடிவமைக்கும் கொமர்ஷல் வங்கியின் முயற்சி குறிப்பிடத்தக்க இலக்கை தொட்டுள்ளது

250வது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூட அன்பளிப்பின் மூலம் டிஜிட்டல் இலங்கையை வடிவமைக்கும் கொமர்ஷல் வங்கியின் முயற்சி குறிப்பிடத்தக்க இலக்கை தொட்டுள்ளது

September 20, 2022  11:01 am

Bookmark and Share
கொமர்ஷல் வங்கி தனது சமூகப் பொறுப்புத் திட்டத்தின் பிரதான செயற்பாடான தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின் அன்பளிப்புத் திட்டத்தின் கீழ் 250வது தகவல் தொழில்நுட்ப நிலையத்தை அண்மையில் மகரகமையில் உள்ள ஒரு பாடசாலைக்கு வழங்கி உள்ளது. தேசிய அபிவிருத்தி இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிஜிட்டல் அறிவை சமூகத்தின் அடிமட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய மட்டத்திலான இந்தத் திட்டத்தின் மூலம் கடைசியாகப் பயன் அடைந்துள்ள பாடசாலை 44 வருடங்கள் பழமையான ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தின் கிழ் வரும் ஜனாதிபதி கல்லூரியாகும். இந்தப் பாடசாலை 3200 மாணவர்களைக் கொண்டுள்ளது. முழு அளவிலான வசதிகள் மற்றும் தளபாடங்களுடன் கூடிய இந்த தகவல் தொழில்நுட்ப கூடம் கல்விப் பொதுத் தராதர உயர்தர பிரிவில் பொது தகவல் தொழில்நுட்பம் (GIT) மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) என்பனவற்றை ஒரு பாடமாக மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் அதேபோல் க.பொ.த சாதாரண தரத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கும் பெரும் பயன் அளிப்பதாகும்.

கடைசியாக அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த நிலையத்தின் மூலம் மொத்தமாக வழங்கப்பட்டுள்ள 250 தகவல் தொழில்நுட்ப கூடங்கள் வழியாக நன்மை அடைந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 230000 என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிலையங்களைப் பராமரிக்கவும்ரூபவ் தரம் உயர்த்தவும் தேவைகள் ஏற்படும் போது இந்த நிலையங்களுக்கு அருகில் உள்ள சம்பந்தப்பட்ட தனது கிளைகள் ஊடாக அவற்றை செய்து வருகின்றது. தொடர்ந்து வரும் மாணவ குழுக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இவை கையாளப்பட்டு வருகின்றன.

இந்த 250வது மைல்கல் தகவல் தொழில்நுட்ப நிலையத்தை கொமர்ஷல் வங்கியின் தலைவர் பேராசிரியர் ஆனன்த ஜயவர்தன திறந்து வைத்தார். வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்கரூபவ் பணிப்பாளர் ராஜா சேனாநாயக்க.பிரதம நிதி அதிகாரி நன்திக புத்திபால ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியத்தின் நிதி உதவியுடன் நாட்டின் டிஜிட்டல் கல்வி அறிவை மேம்படுத்த நீண்டகாலமாக செயற்பட்டு வரும் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் இந்த நிழைலயம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த 250வது தகவல்தொழில்நுட்ப நிலைய அன்பளிப்பு பற்றி கருத்து வெளியிட்ட வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட எதிர்கால சந்ததியை வளப்படுத்தும் நோக்கில் நாம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். உபகரணங்களை அன்பளிப்புச் செய்வதன் மூலம் மட்டுமன்றி தகவல் தொழில்நுட்ப அறிவு விருத்தி பயிற்சி என்பனவற்றில் முதலீடுகளை செய்வதன் மூலமும் நாம் இதனை செய்து வருகின்றோம். மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப கற்கை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் தகவல் தொழில்நுட்ப இலக்குகளை நோக்கிய எமது முன் முயற்சிகளானது நாட்டின் நிலைத்தன்மை அபிவிருத்தி இலக்குகளையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். இது தரமான சமத்துவமான கல்வி வாய்ப்பை எல்லோருக்கும் உறுதி செய்வதையும் உள்ளடக்கியதாகும். அத்தோடு எல்லோருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்கை வசதிகளை வழங்கவதுமாகும் என்று கூறினார்.

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கிரூபவ் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 12 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கிரூபவ் கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 940 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியதுரூபவ் அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது: