Back to Top

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையால் பல உயிர்கள் ஆபத்தில்

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையால் பல உயிர்கள் ஆபத்தில்

September 23, 2022  08:11 am

Bookmark and Share
சுகாதாரத் துறைக்குத் தேவையானளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை போதியளவு வழங்கும் விடயத்தில் இன்று அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், அதிலும்,புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமான கதிரியக்க சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகளினால் அதிகளவான புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவது அரசின் கடமை என்பதோடு,அது அவ்வாறு நடக்காதது வருந்தத்தக்க விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை,அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 19/2022 என்பதும் சுகாதாரத் துறையுடன் தொடர்புடையதாக இருந்தால், தற்போதைய மனிதவள முகாமைத்துவம் மேலும் சிக்கலுக்குள்ளாகலாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(22) பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 மூலம் கேள்விய எழுப்பிய வன்னமே அவர் இவ்வாறு தெரிவித்தார்.