Back to Top

கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

September 23, 2022  12:30 pm

Bookmark and Share
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில ஆண் ஒருவர் நேற்று (22) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்கரையில் சம்பவ தினமான இரவு சடலம் ஒன்று இருப்பதாக மீனவர்கள் பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையி அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-