Back to Top

ஏசியாமணியின் மதிப்புமிக்க இரட்டை விருதுகளை பெற்ற கொமர்ஷல் வங்கி

ஏசியாமணியின் மதிப்புமிக்க இரட்டை விருதுகளை பெற்ற கொமர்ஷல் வங்கி

September 24, 2022  09:58 am

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியானது இந்த வாரம் சர்வதேச அரங்கில் குறிப்பிடத்தக்க சாதனை ஒன்றைப் பதிவுசெய்தது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏசியாமணி வழங்கும் இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது.

2022 ஏசியாமணி விருதுகள் விழா சிங்கப்பூர் ஷங்கிரிலா ஹோட்டலில் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெற்றது. அவ்விழாவில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான (SME) வங்கிக்கான சிறந்த வங்கி மற்றும் சுற்றுச்சூழல் சமூக மற்றும் ஆளுமைக்கான சிறந்த வங்கி (ESG) ஆகிய விருதுகள் கொமர்ஷல் வங்கிக்கு வழங்கப்பட்டது.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க வங்கிக்கு வழங்கப்பட்ட விருதுகளுடன் இங்கே படத்தில் காணப்படுகின்றார்.