Back to Top

கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தம்?

கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தம்?

September 24, 2022  10:18 am

Bookmark and Share
தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிா்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சா்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் வருவாயையும், உக்ரைன் போருக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தையும் கட்டுப்படுத்த ரஷ்யாவின் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களின் விலைக்கு வரம்பு விதிக்கும் யோசனையை ஜி-7 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் முன்வைத்துள்ளன.

இதுதொடா்பாக தில்லியில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதா் டெனிஸ் ஆலிபோவ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தனது வா்த்தக நலனுக்குப் பாதகமான எந்தவொரு வழிமுறையையும் ரஷ்யா பின்பற்றாது. தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிா்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சா்வதேச சந்தைக்குக் கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தும்.

ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு விதிக்கும் யோசனையை இந்தியா கவனமாக அணுகி வருகிறது. ஒருவேளை அந்த நடவடிக்கை அமலுக்குக் கொண்டு வரப்பட்டால், தனது சொந்த நலனைத்தான் இந்தியா பின்தொடரும்.

உக்ரைனுக்குப் பாகிஸ்தான் ஆயுத உதவி வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அந்தத் தகவல் உறுதியானால், அது ரஷ்யா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தாா்.