Back to Top

DFCC வங்கியும் AIA Insurance உம் தம்முடைய நீண்ட கால கூட்டாண்மை மற்றும் Bancassurance இல் உச்ச சாதனையாளர்களைக் கொண்டாடியுள்ளன

DFCC வங்கியும் AIA Insurance உம் தம்முடைய நீண்ட கால கூட்டாண்மை மற்றும் Bancassurance இல் உச்ச சாதனையாளர்களைக் கொண்டாடியுள்ளன

September 26, 2022  12:40 pm

Bookmark and Share
AIA/DFCC Bancassurance விருதுகள் வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் உள்ள ஓக் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது AIA Insurance மற்றும் DFCC வங்கியின் Bancassurance வணிகத்தில் உச்ச சாதனையாளர்களை அங்கீகரித்துள்ள, அதே நேரத்தில் வங்கி மற்றும் காப்புறுதித் துறையில் இந்த இரண்டு பெரு நிறுவனங்களுக்கும் இடையிலான வலுவான, நீண்டகால கூட்டாண்மையைக் கொண்டாடியுள்ளது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் AIA Bancassurance மற்றும் DFCC வங்கியின் வணிக மார்க்கங்களில் சிறந்து விளங்கி, Bancassurance வணிகத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு உந்துசக்தியளித்தவர்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா மற்றும் AIA Insurance இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான சத்துரி முனவீர ஆகியோர் இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அத்துடன், இரு நிறுவனங்களின் ஏனைய அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அணியினரும் கலந்து சிறப்பித்துள்ளனர். 2016 நவம்பர் முதல் வங்கியின் நாடளாவிய கிளை வலையமைப்பின் ஊடாக வழங்கப்படும் ஆயுள் காப்புறுதி தொடர்பான தயாரிப்புகளுக்கான DFCC வங்கியின் பிரத்தியேக கூட்டாளராக AIA Insurance திகழ்ந்து வருவதுடன், இந்த நோக்கத்திற்காக இரு தரப்பினரும் ஒரு நீட்டிக்கப்பட்ட உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விருதுகள் மற்றும் கூட்டாண்மை தொடர்பில் கருத்து வெளியிட்ட DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா அவர்கள், “எங்கள் இரு நிறுவனங்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீண்டகால உடன்படிக்கையானது எமது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை உருவாக்கி, அவர்களுக்கு பல்வேறு நிதி மற்றும் காப்பீட்டுத் தேவைகளை ஈடு செய்வதற்காக, ஒப்பீட்டளவில் சிறந்த விலையில் காப்புறுதி மற்றும் வங்கித் தீர்வுகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில், DFCC வங்கி மற்றும் AIA Insurance ஆகியவற்றில் உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய சில பிரமிக்கத்தக்க பெறுபேறுகளை நாங்கள் கண்ணுற்றோம். இதுவே AIA DFCC Bancassurance விருதுகளை ஏற்பாடு செய்ய எமக்கு ஊக்கமளித்துள்ளது. வெற்றியாளர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவர்கள் மற்றவர்களுக்கும் ஊக்கமளிப்பார்கள் என்று நம்புகிறேன். DFCC மற்றும் AIA கட்டியெழுப்பியுள்ள மிகச்சிறப்பான பணி-உறவை அங்கீகரிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். இது சமத்துவமான ஒரு கூட்டாண்மை என்பதுடன், தனியாக செயல்படுவதை விட ஒன்றாக செயல்படுவது நம்மைச் சிறப்பாக ஆக்குகிறது,” என்று குறிப்பிட்டார்.

முக்கியமான விருது பிரிவுகளில் Annual CEO’s Club Awards, Central Sales Team Highest Volume Generated Team Leaders, MDRT Winners, Best Financial Planning Executive, Million Club Awards, Best New Entrant Branch, Most Productive Branch, Highest Long-Term Branch, Best Bancassurance Sales Manager, Best Regional Manager, Best Branch மற்றும் Top Introducer Award ஆகியன உள்ளடங்கியிருந்தன. சில பிரிவுகள் DFCC மற்றும் AIA க்கு மாத்திரமே வழங்கப்பட்டதுடன், ஏனையவற்றை இரு நிறுவனங்களும் தமக்கிடையே பகிர்ந்து கொண்டன.

“இது ஒரு சிறந்த தருணம் என்பதுடன், எமது நீண்டகால கூட்டாண்மையை மட்டுமல்லாது, இந்த வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள வியத்தகு நபர்களின் கொண்டாட்டமுமாகும். இலங்கையின் மிகப் பழமையான மற்றும் டிஜிட்டல் ரீதியில் முற்போக்கான வங்கிகளில் ஒன்றுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு உண்மையான பங்குடமையின் அடையாளகும். ஏனெனில் இங்கு நாம் ஒன்றாக வெற்றி பெறுவதற்கு ஒருவருக்கொருவர் எமக்கிடையிலான பலத்தை வெளிப்படுத்துகிறோம். அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் சிறந்து விளங்கும் அபிலாஷையுடன் தொடர்ந்து பயணிப்போம்”, என AIA Insurance நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சத்துரி முனவீர அவர்கள் கருத்து வெளியிட்டார்.

மொத்தத்தில், DFCC வங்கி மற்றும் AIA Insurance ஆகியவற்றின் நட்சத்திர பெறுபேறுகளை நிலைநாட்டியவர்களுக்கு 182 விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கை ஒரு தேசமாக எதிர்கொண்ட மிகவும் சவாலான காலங்களில் அவர்களின் தலைசிறந்த பணி மற்றும் முயற்சி, செல்வ முகாமைத்துவத்தை ஊக்குவித்தல், இளைப்பாறல் திட்டமிடல், சுகாதார காப்புறுதி மற்றும் உயர்கல்வி திட்டமிடல் ஆகியவற்றிற்கான அங்கீகாரமாக இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. AIA DFCC Bancassurance விருதுகளில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் மிகச் சிறந்த கிளைக்கான விருது மற்றும் மிகச் சிறந்த அறிமுகம் செய்பவர் விருது ஆகியவை அடங்கும். அதன்படி, 2019 ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த கிளைக்கான விருதை கொட்டாவை கிளையும், 2020 ஆம் ஆண்டிற்காக மாத்தறை கிளையும் பண்டாரகமை கிளையும் முறையே 1 மற்றும் 2 ஆவது கிளைப் பிரிவுக்கான விருதை வென்றன. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த அறிமுகம் செய்தவருக்கான விருதுகளை முறையே கொட்டாவை கிளையைச் சேர்ந்த சமித்த ஜயதிலக்க, களுத்துறை கிளையைச் சேர்ந்த விராஜ் உடுகம மற்றும் மாத்தறை கிளையைச் சேர்ந்த தனஞ்ஜய நந்தசிறி ஆகியோர் முறையே வென்றுள்ளனர்.

DFCC வங்கி மற்றும் AIA Insurance ஆகியன, DFCC வங்கியின் நாடு தழுவிய கிளை வலையமைப்பின் மூலம் வசதியாகவும் இலகுவில் அணுகக்கூடிய வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் அதிசிறந்த மதிப்பை வழங்குவதற்கு தொடர்ந்து இணைந்து செயல்படும். வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் பொருளாதார சூழலின் மூலம் சுறுசுறுப்புடன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதை உறுதி செய்வதற்காக இரு நிறுவனங்களும் மூலோபாய நகர்வுகளை மேற்கொண்டுள்ளன.  

DFCC மாத்தறை கிளையானது கிளைப் பிரிவு 01 இல் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிளையாக தெரிவு செய்யப்பட்டது

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்      

DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 - 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] A+ தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.