Back to Top

வருடாந்த பரிசளிப்பு விழா

வருடாந்த பரிசளிப்பு விழா

September 29, 2022  12:51 pm

Bookmark and Share


கம்பளை முஸ்லிம் மகா வித்யாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 2022.09.28 ம் திகதியன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் நஜீபாவின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கம்பளை வலைய தோட்டக்கல்விப் பணிப்பாளர் உமேஷ் நாதன் மாற்றும் அதிதியாக அகில இலங்கை வை எம் ஏ பேரவையின் கண்டி மாவட்டப் பணிப்பாளர் இஹ்திஷான் முஹம்மட், விஷேட பேச்சாளராக அகில இலங்கை வை எம் ஏ பேரவையின் முன்னால் தேசிய தலைவர் ஷஹீத் எம் ரிஸ்மி ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு இன்னும் பல பிரமுகர்களும், பாடசாலை முன்னால் அதிபர்களும், தனவந்தர்களும், இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது வரை காலமும் புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரணதர, உயர்தர பரீட்சை மற்றும் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த 130 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.