Back to Top

 5,774 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

5,774 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

November 18, 2022  11:33 am

Bookmark and Share
மியான்மரில் தேசிய வெற்றி தினக் கொண்டாட்டத்தையொட்டி, வெளிநாட்டினா் உள்பட 5,774 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து, அவா்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினா்.

விடுவிக்கப்படுவோரில் முன்னாள் பிரிட்டன் தூதரக அதிகாரி விக்கி பாவ்மன், ஜப்பான் படத் தயாரிப்பாளா் டோரு குபோடா, அவுஸ்திரேலிய கல்வியாளா் சீன் டா்னல், 11 மியான்மா் பிரபலங்களும் அடங்குவா்.

மியான்மரில் கடந்த 2020 தோ்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் திகதி கலைத்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் 1,719 போ் உயிரிழந்தனா். சுமாா் 9,984 போ் கைது செய்யப்பட்டனா்.