Back to Top

DFCC வங்கி தனது தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க உடுவெலவை தலைமைத்துவ அணிக்குள் வரவேற்கிறது

DFCC வங்கி தனது தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க உடுவெலவை தலைமைத்துவ அணிக்குள் வரவேற்கிறது

November 23, 2022  10:50 am

Bookmark and Share
DFCC வங்கி பிஎல்சி, தனது தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக (Chief Operating Officer) அசங்க உடுவெலவை 2022 நவம்பர் 8 ஆம் திகதி முதல் நியமித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. திரு உடுவெல அவர்கள் ஹட்டன் நஷனல் வங்கி பிஎல்சியில் மூன்று தசாப்தங்களாக நீண்ட மற்றும் புகழ்பெற்ற தொழில் வாழ்க்கையில், கடைசியாக செயற்பாடுகளுக்கான பிரதிப் பொது முகாமையாளராகக் கடமையாற்றிய பின்னர் தற்போது DFCC வங்கியின் உயர்மட்ட வரிசையில் இணைந்துள்ளார்.

பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பதவி நிலைகளில் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவுடன் ஒரு வலுவான தலைவரான அவர், தனது தொழில் வாழ்க்கையில் உற்பத்தித்திறன் மேம்பாடுகள் மற்றும் செயல்முறை முகாமைத்துவம் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பிரதம செயற்பாட்டு அதிகாரியின் பாத்திரத்தில் திரு உடுவெல அவர்கள், DFCC வங்கி நாட்டிலுள்ள மிகவும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கிகளில் ஒன்றாக அதன் பரந்த இலக்குகளை அடைவதற்கு வழிகாட்ட உதவுவார்.

ஹட்டன் நஷனல் வங்கி பிஎல்சியில் தனது நீண்டகால சேவையின் போது, திரு உடுவெல அவர்கள் கிளை நடவடிக்கைகள், மையப்படுத்தப்பட்ட செயற்பாடுகள், மையப்படுத்தப்பட்ட பண முகாமைத்துவம், ஏடிஎம் முகாமைத்துவம், மையப்படுத்தப்பட்ட பின்பணி அலுவலகம், உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பணம் அனுப்புதல், குழுமத்திற்கான கட்டமைப்புகள் நடைமுறைப்படுத்தல் மற்றும் மையப்படுத்தப்பட்ட கடன் நிர்வாகம் ஆகியவற்றுக்கு பொறுப்பு வகித்துள்ளார். Finacle பிரதான வங்கிச்சேவை மென்பொருளின் புதுப்பிக்கப்பட்ட வடிவத்திற்கான மாற்றத்திற்கான அணிக்கும் அவர் தலைமை தாங்கினார்.

அவர் Deloittes உள்ளிட்ட வெளிப்புற ஆலோசனை நிறுவனங்களுடன் இணைந்து, வளர்ச்சி மாற்றத்திற்கான பயணங்களை முன்னெடுக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் மற்றும் செயல்முறைகளை சீரமைக்கவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளார். திரு உடுவெல அவர்கள் NIBM, பூனே, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஜப்பான் நகோயாவில் University of Nagoya and Toyota ஆகியவற்றில் கடன் மதிப்பீடு மற்றும் முகாமைத்துவம், பணம் மற்றும் சொத்து முகாமைத்துவம், தலைமைத்துவம் மற்றும் செயல்முறை முகாமைத்துவம் மற்றும் டொயோட்டா பணி நெறிமுறைகள் ஆகியவற்றில் வெளிநாடுகளில் முறையே விரிவான பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

அசங்க உடுவெல அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்டமும், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுமாணிப் பட்டமும் பெற்றுள்ளதுடன், Omega Credit Administration இன் சான்று அங்கீகாரமும் பெற்றவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், திரு. உடுவெல அவர்கள் குடும்பம் சார்ந்தவர் என்பதுடன், பட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஒரு தீவிர விளையாட்டு வீரர். பல போட்டிகளில் தனது முன்னாள் தொழில்தருநரைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதுடன், அவரது இளமை பருவத்தில் தேசிய மட்டத்தில் இந்த விளையாட்டில் பங்குபற்றியுள்ளார்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்...

DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 - 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] A+ தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.