Back to Top

தொடர்ந்து 14 வது வருடமாக 'பிஸ்னஸ் டுடே டொப் 40' இல் முன்னணி நிலையில் இருக்கும் கொமர்ஷல் வங்கி

தொடர்ந்து 14 வது வருடமாக 'பிஸ்னஸ் டுடே டொப் 40' இல் முன்னணி நிலையில் இருக்கும் கொமர்ஷல் வங்கி

November 23, 2022  04:04 pm

Bookmark and Share
2022 நவம்பரில் வெளியிடப்பட்டுள்ள பிஸ்னஸ் டுடேயின் அண்மைய பட்டியலில் கொமர்ஷல் வங்கி தொடர்ந்து 14வது வருடமாக உயர் தரத்தில் உள்ள வங்கியாகவும் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த செயற்பாடு மிக்க ஐந்து கம்பனிகளில் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி ஒட்டு மொத்த தர வரிசையில் இவ்வாண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.

´பிஸ்னஸ் டுடேயின் மதிப்பீட்டுக்கு உட்பட்ட காலமானது பொதுவாக வர்த்தகங்களுக்கும் குறிப்பாக வங்கிகளுக்கும் மிகவும் சவால் மிக்க ஒரு காலமாகும்´ என்று கூறினார் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க. ´இலங்கையில் ஒட்டு மொத்தமாக மிகச் சிறந்த செயற்பாடு மிக்க மூன்றாவது கம்பனி என்ற நிலையானது நாம் வாழும் இந்த பூமிக்கும் எமது சமூகத்துக்கும் உரிய கடப்பாடுகளை பூர்த்தி செய்யும் அதேவேளை சவால்களுக்கு முகம் கொடுக்கும் மற்றும் பங்குதாரர்களின் எதிர்ப்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் வங்கியின் ஆற்றலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக எம்மை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது´ என்று அவர் மேலும் கூறினார்.

2020-2021ல் வங்கியின் செயற்பாடுகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள பிஸ்னஸ் டுடே ´செயற்பாட்டு செலவினங்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருமான செலவின் விகிதாசாரம்ரூபவ் இலாபத்தன்மை என்பனவற்றில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாமல் தடுத்து கொமர்ஷல் வங்கி 2021ஐ திடமான வளர்ச்சியுடன் முடிவு செய்துள்ளது. தனது மூலோபாய தூண்களுக்கு இசைந்து உற்பத்தி மற்றும் செயற்பாட்டு சிறப்பாற்றலில் விவேகமான வளர்ச்சியோடும் 2021ஐ கொமர்ஷல் வங்கி நிறைவு செய்துள்ளது´ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

´வர்த்தகங்களுக்கு தடைக்காலம் விதிக்கப்பட வேண்டும் என்ற அரசின் வேண்டுதலுக்கு வங்கி செவி சாய்த்தது.; செயல்திறன் மிக்க தொடர்பாடல் மற்றும் நெருக்கமான ஊழியர் மேற்பார்வை என்பனவற்றின் மூலம் மொத்த முற்பண வரிசையில் 25 வீதம் வங்கியால் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டது´ என்று பிஸ்னஸ் டுடே மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு டொப் 40 தெரிவுக்காக கவனம் செலுத்டதப்பட்ட பல்வேறு வகைப்பிரிவுகளில் முன்னணி வர்த்தகங்கள் தமது வரிகள் ஊடாக அரச கருவூலத்துக்கு அளித்த பங்களிப்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிஸ்னஸ் டுடே தெரிவித்துள்ளது. கொமர்ஷல் வங்கி 2021ல் மொத்தமாக 8.3 பில்லியன் ரூபாவை வரியாகச் செலுத்தி உள்ளது.

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 12 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கிரூபவ் கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 940 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது: