Back to Top

இலங்கை கட்டளைகள் நிறுவனம், இலங்கை தேசிய தர விருதுகளை ஏற்பாடு செய்து உலகளாவிய தரத்திற்கு இணையான தரத்திற்கான அர்ப்பணிப்புக்கு அங்கீகாரமளித்துள்ளது

இலங்கை கட்டளைகள் நிறுவனம், இலங்கை தேசிய தர விருதுகளை ஏற்பாடு செய்து உலகளாவிய தரத்திற்கு இணையான தரத்திற்கான அர்ப்பணிப்புக்கு அங்கீகாரமளித்துள்ளது

November 24, 2022  01:49 pm

Bookmark and Share
இலங்கை கட்டளைகள் நிறுவனம், 26 வது வருடாந்த இலங்கை தேசிய தர விருதுகள் வைபவத்தை, மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், 2022 நவம்பர் 16 அன்று ஸ்ரீலங்கா பவுண்டேஷன் நிறுவனத்தில் நடத்தியுள்ளது. தரம் மற்றும் செயற்திறன் மேன்மையில் சிறந்து விளங்குவதற்கான மிக உயர்ந்த, மிகவும் மதிப்புமிக்க தேசிய மட்ட விருதுகளான இலங்கை தேசிய தர விருதுகள், மேன்மையுடன் விளங்குவதற்காக தம்மை அர்ப்பணித்துள்ள இலங்கையின் சிறந்த ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் வணிகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றன.

இலங்கை தேசிய தர விருதுகள் நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதுடன், அமெரிக்காவின் மல்கம் போல்ட்ரிச் தேசிய தர விருதுகள் நிகழ்வில் பயன்படுத்தப்படும் கடுமையான மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த விருதுகள் அவற்றின் பெறுநர்கள் மற்றும் பரந்த சமூகத்திற்கு, மதிப்பு மற்றும் கௌரவத்தைத் தவிர, அறிவுப் பகிர்வு மூலம் தரமான தரநிலைகள் மற்றும் செயல்திறன் சிறப்பை மேலும் மேம்படுத்துவதற்கும், அதிகரிப்பதற்கும் ஊக்கமளிக்கின்றன. பங்கேற்பாளர்கள் விரிவான அறிக்கைகள் மற்றும் மதிப்பீடுகளைப் பெறுவதுடன், அவர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற பரிந்துரைகளுடன், அவர்கள் தங்கள் வணிகச் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த அவர்கள் இவற்றைப் பயன்படுத்தலாம்.

Hemas Manufacturing (Private) Limited, உற்பத்திக்கான பாரிய பிரிவில் 2019 ஆம் ஆண்டுக்கான 1 வது ஸ்தான தேசிய தர விருதைப் பெற்றதுடன், CBL Exports (Private) Limited ஆனது 2020 ஆம் ஆண்டின் உற்பத்தி - நடுத்தர அளவிலான துறையில் 1 வது ஸ்தான தேசிய தர விருதை வென்றது. Commercial Bank of Ceylon PLC (சேவைகள் - பாரிய), Maliban Biscuit Manufactories (Private) Limited (உற்பத்தி - பாரிய) மற்றும் Nestle Lanka PLC (உற்பத்தி - பாரிய) ஆகியவையும் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய தர விருதுகளை முறையே அந்த வரிசையில் பெற்றுள்ளன. இந்த பிரதான விருதுகள், நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சரான கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், பல பிரிவுகள் மற்றும் துறைகளில் பல சிறப்பு விருதுகள் மற்றும் பிற விருதுகளும் வழங்கப்பட்டன. 26 வது வருடாந்த இலங்கை தேசிய தர விருதுகள் வைபவத்தில், இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. அசங்க ரணசிங்க, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி (திருமதி) சித்திகா ஜி. சேனாரத்ன மற்றும் ஏனைய கௌரவ விருந்தினர்கள் அடங்கலாக பல்வேறு செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் மற்றும் வர்த்தகத் துறை பிரபலங்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி (திருமதி) சித்திகா ஜி சேனாரத்ன அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை தேசிய தர விருதுகள் நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மையான நோக்கமானது தரமான தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதுடன், ஒரு செயல்முறை மற்றும் பயணமாக செயல்திறன் சிறப்பை புரிந்துகொள்வதை ஊக்குவிப்பதாகும். ஏனெனில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதில் இவை முக்கியமான கருவிகளாகக் காணப்படுகின்றன. இத்தகைய கட்டமைப்புக்களை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் தமது இலக்குகளை அடையவும், பெறுபேறுகளை மேம்படுத்தவும், மேலும் போட்டித்தன்மையுடையதாகவும், இறுதியில் கூடுதல் அங்கீகாரம் மற்றும் இலாபம் ஈட்டக்கூடியதாகவும் மாறும் என்பதை வணிக சமூகத்திற்கு நிரூபிக்க உதவுகிறது. வெற்றியாளர்கள் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்காக ஒரு சமூகமாக ஒன்றிணைந்து, செயல்திறன் சிறப்பை நோக்கிய வேலைத்திட்டத்தைப் பின்பற்ற மற்றவர்களை ஊக்குவிக்க முடியும். இந்த ஆண்டு நிகழ்வின் விளைவு குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், இந்த மதிப்புமிக்க முயற்சியில் பங்கேற்ற மற்றும் பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

இலங்கை தேசிய தர விருதுகளின் வெற்றியாளர்கள் கடுமையான மற்றும் முழுமையான மதிப்பீடு மற்றும் விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்ததன் விளைவாக தீர்மானிக்கப்படுகிறார்கள். ஐந்து-கட்ட செயல்முறையான கடுமையான விதிகள் மற்றும் எவ்விதமான பக்கசார்பின்மையையும் உறுதி செய்வதற்கான முயற்சிகள் இதில் அடங்கியுள்ளன. முதல் கட்டத்தில், விண்ணப்பதாரர்கள் 3 முதல் 6 தேர்வாளர்களால் சுயாதீனமான, தனிப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள். இரண்டாம் கட்டத்தில் குறித்த தீர்மானத்தின் ஒருமித்த கருத்து தேர்வாளர்களால் கூட்டாக மதிப்பாய்வு செய்யப்பட்டு பரீட்சிக்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்தின் போது, இரண்டாம் கட்டத்தின் போது அனுப்பப்பட்ட அனைத்து உறுதிப்பாடுகள் மற்றும் தரவுகளை சரிபார்ப்பதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் நேரடி கள விஜயங்கள் நடத்தப்படுகின்றன. நான்காவது கட்டத்தில், மதிப்பாய்வுக் குழுவின் மதிப்பாய்வு மற்றும் பரிந்துரைகள் நீதிபதிகள் குழுவிற்குக் கொண்டு செல்லப்படுகிறது, மேலும் ஐந்தாவது கட்டத்தில், நிபுணர்களைக் கொண்ட ஒரு நடுவர் குழு, தகுதியின் அடிப்படையில் மாத்திரம் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

இலங்கை தேசிய தர விருதுகளை வெல்வது, பெறுநருக்கு இந்த உண்மையைப் பகிரங்கப்படுத்தவும், அத்தகைய விளம்பரத்தின் பலன்களை 5 ஆண்டுகள் வரை அனுபவிக்கவும் உரிமை அளிக்கிறது. அதே நேரத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படவும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்கு வலுவூட்டுகிறது. மேலும் இந்த விருதுகள், வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்களுடன் சிறப்பாக ஈடுபாடுகளை முன்னெடுக்கவும், அவர்களைப் புரிந்து கொள்ளவும், மேலும் திறம்பட மூலோபாயங்களை வகுக்கவும் நிறுவனங்களுக்கு உதவுகின்றன. அதே வேளையில் உலகளாவிய செயல்திறன் சிறப்பு விருதுகளுக்கு போட்டியிட தகுதியுடையவர்களாகவும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும் பெறுநர்களுக்கு வழிகோலுகின்றன.

இலங்கை கட்டளைகள் நிறுவனம் என்பது இலங்கையின் தேசிய தரநிலை அமைப்பாகும். இது தொழில்நுட்ப அமைச்சின் கீழ் செயல்படுகிறது. இலங்கையில் தேசிய தரநிலை அமைப்பாக இருப்பதன் மூலம், இலங்கை கட்டளைகள் நிறுவனமானது ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச தரப்படுத்தல் அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளது. சர்வதேச தரப்படுத்தல் அமைப்பின் உறுப்பினராக, சர்வதேச தரநிலைகள், தொழில்நுட்ப ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகள் தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை தேசிய அளவில் சமூகத்திற்கு பரப்புவதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவனம் பொறுப்பாகும்.