Back to Top

INSEE சீமெந்து நிறுவனம் தனது சிற்பிகளை நீண்ட கால சேவை 2022 விருதுகள் (Seniority Awards) நிகழ்வின் மூலமாகக் கொண்டாடியுள்ளது

INSEE சீமெந்து நிறுவனம் தனது சிற்பிகளை நீண்ட கால சேவை 2022 விருதுகள் (Seniority Awards) நிகழ்வின் மூலமாகக் கொண்டாடியுள்ளது

November 24, 2022  02:04 pm

Bookmark and Share
இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து நிறுவனம், அதன் நீண்டகால சேவை மற்றும் விசுவாசமான பணியாளர்களின் மதிப்புமிக்க பங்களிப்பு மற்றும் முன்னோடி முயற்சிகளை அங்கீகரித்து, 2022 ஆம் ஆண்டுக்கான Seniority Awards விருதுகள் நிகழ்வை அண்மையில் நடத்தியது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக அர்ப்பணிப்புமிக்க சேவையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த, நாடு முழுவதும் உள்ள அதன் பணியிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20 INSEE பணியாளர்களுக்கு அவர்களின் விசுவாசம் மற்றும் சேவைக்கான பாராட்டு அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, விருது பெற்றவர்கள் INSEE சீமெந்து நிறுவனத்தில் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், விநியோக நிர்வாகம் மற்றும் நிதி போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பணிபுரிகின்றனர்.

Seniority Awards விருதுகள் நிகழ்வில் INSEE சீமெந்து நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரியான நந்தன ஏக்கநாயக்க மற்றும் பிரதம பணியாளர்கள் அதிகாரியான திலங்கா சில்வா உட்பட நிர்வாக முகாமைத்துவ அணி உறுப்பினர்கள் மற்றும் பணிப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு. ஏக்கநாயக்க அவர்கள், இந்த Seniority Awards விருதுகள் நிகழ்வானது பல வருட சேவையை மாத்திரமன்றி, நிறுவனத்தில் நீண்ட காலமாக சேவையாற்றிய விசுவாசம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் தியாகங்களுக்காக ஊழியர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்பத்தினரையும் கூட அங்கீகரிப்பதாக குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் விளக்கிய திரு. ஏக்கநாயக்க அவர்கள், “INSEE சீமெந்து நிறுவனத்தில், நாங்கள் வாழ்க்கைக்காக கட்டியெழுப்புகிறோம். இதனால், பல சந்தர்ப்பங்களில், INSEE மற்றும் எங்கள் நோக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த நபர்களை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இந்த விருதுகள், இங்கு INSEE இல் எங்கள் பணியாளர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் தனித்துவமான உறவையும் சிறப்பித்துக் காண்பிக்கின்றன. மேலும் எங்கள் பணியாளர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றன. இந்த ஆண்டு Seniority Awards விருதுகளைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும், கௌரவிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு விருதுகளைப் பெற்ற 20 பேரில் ஏழு பேர், 3 தசாப்தங்களுக்கும் மேலாக INSEE சீமெந்து குடும்பத்தின் அங்கத்தவர்களாக உள்ளனர், இது நிறுவனம் செயற்பட்டு வந்துள்ள ஒட்டுமொத்த காலத்தின் பாதிக்கும் மேலானதாகும். மனித மூலதனத்தின் பெறுமதி மற்றும் அர்ப்பணிப்புமிக்க, நீண்டகால சேவையைப் பற்றி கருத்து வெளியிட்ட தலைமை பணியாளர்கள் அதிகாரியான திலங்கா சில்வா, “INSEE நிறுவனத்தில் நாங்கள் மிகவும் தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளோம். மக்கள் அடிக்கடி வெவ்வேறு நிறுவனங்களில் இணைந்து கொள்கின்ற யுகத்தில், இது INSEE இன் அரவணைப்பு, விருந்தோம்பல் மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலின் அடையாளம் என்பதுடன், அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்று. எங்கள் மத்தியில் நீண்ட காலமாக சேவையாற்றி வந்துள்ள பலரும் உள்ளதுடன், அவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.

“ஆரம்பத்திலிருந்தே, நாங்கள் எங்கள் பணியாளர்களை சிறப்பாகக் கவனித்து வருகிறோம். அதற்குப் பதிலாக, அவர்கள் எங்களைக் கவனித்துக்கொண்டார்கள். நாங்கள் வெற்றிகரமான உறவுகளை கட்டியெழுப்பியுள்ளோம் மற்றும் ஒன்றாக வெற்றிபெற அந்த தளத்தைப் பயன்படுத்தினோம்,” என்று அவர் மேலும் கூறினார். “இன்று, நாங்கள் அபிமானம் பெற்ற தொழில்தருநராக இருக்கிறோம். மேலும் பணியிட பாதுகாப்பு, நெறிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் மிக உயர்ந்த தராதரங்களைக் கடைப்பிடிக்கிறோம். INSEE இல், நாம் வாழ்க்கைக்காகக் கட்டியெழுப்புகிறோம் என்று கூறும்போது, அதில் நமது பணியாளர்களுடனான நமது உறவுமுறைகளும் அடங்கும். INSEE Seniority விருதுகள், இந்த சாதனையைக் கொண்டாடுகின்றன,” என்று கூறி தனது கருத்தினை நிறைவு செய்தார்.