Back to Top

காலநிலை பாதுகாப்பிற்காக சர்வதேச ரீதியில் ‘Pole 2 Pole challenge’ இற்கு ஒத்துழைப்பு வழங்கும் DHL Express Sri Lanka

காலநிலை பாதுகாப்பிற்காக சர்வதேச ரீதியில் ‘Pole 2 Pole challenge’ இற்கு ஒத்துழைப்பு வழங்கும் DHL Express Sri Lanka

November 24, 2022  02:14 pm

Bookmark and Share
சர்வதேச ரீதியில் ‘Pole 2 Pole challenge’ இற்கு ஆதரவு வழங்கும் வகையில் தூய்மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவதற்காக DHL Express Sri Lanka நிறுவனம் பல்வேறு நிகழ்வுகளை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கடற்கரையோர சிரமதானம், மரதன் ஓட்டம், அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்லும் தினம் மற்றும் மர நடுகை போன்ற நிகழ்வுகள் இதில் உள்ளடங்கியிருந்தன.

முதலாவது முயற்சியாக வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் 65ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், அங்கு காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது. கடற் கரையோரத்தில் காணப்பட்ட கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய 100ற்கும் அதிகமான கழிவுகளை அவர்கள் சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஊக்கப்படுத்தும் நோக்கில் 100ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் 4 கிலோ மீற்றர் தூரத்துக்கான மரதனோட்டம் மற்றும் நடத்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இந்த மரதனோட்டமானது சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்து DHL தலைமையத்தில் முடிவடைந்திருந்தது. இதில் பங்குபற்றிய அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், பாராட்டுக்கான சின்னமும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து சாதனத்தை மாற்றுவதன் ஊடாக காபன் வெளியேற்றத்தை எவ்வாறு இலகுவில் குறைக்கலாம் என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சைக்கிளில் அலுவலத்துக்குச் செல்லும் நாள்’ நிகழ்வில் 12ற்கும் அதிகமான DHL ஊழியர்கள் பங்கெடுத்திருந்தனர்.

மேலும் காலி நியகம விஜித மத்திய கல்லூரியில் 120 மரக்கன்றுகளை நாட்டி வைப்பதற்கான வைபவத்தில் சுமார் 45 ஊழியர்கள் கலந்துக் கொண்டிருந்தனர். அத்துடன் பாடசாலை மாணவர்கள் ஆயர்வேத வைத்தியரிடமிருந்து மூலிகைச் செடிகள் குறித்த விபரங்களைக் அறிந்துக் கொண்டனர்.

DHL Express Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமையதிகாரி டிமித்ரி பெரேரா குறிப்பிடுகையில், “எமது நிலைபேறான செயற்பாடுகளை Pole 2 Pole challenge பலப்படுத்தியிருப்பதுடன், அதற்குப் பங்களித்துள்ளது. தூய்மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில் நாங்கள் பங்கு கொண்டுள்ளோம் என்பதை உறுதிசெய்யும் வகையில் உலகெங்கிலும் உள்ள எமது சக ஊழியர்களுடன் நாம் ஒத்துழைக்கின்றோம். சிலிர்ப்பூட்டலை விரும்பும் ரோலன்ட் தோமஸ் மற்றும் லிவ் மாரிட் ஸ்டேன் ஆகியோர் தென்துருவத்தை அடையும் பயணத்துக்கு நாம் வாழ்த்துகின்றோம்” என்றார்.

DHL Express Sri Lanka நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் தலைவர் தாரக டி சில்வா தெரிவிக்கையில், “Pole 2 Pole challenge இற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பல்வேறு முயற்சிகளில் நாம் பங்கெடுத்துள்ளதுடன், எமது கிரகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து எமக்கு உள்ள பொறுப்பை எமது சக பணியாளர்கள் புரிந்துகொண்டிருப்பதுடன் அதனை ஏற்றக்கொண்டும் உள்ளனர். ஆரோக்கியமான வேலை வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் ‘வேலைக்கு ஏற்ற, வாழ்க்கைக்கு ஏற்ற’ என்ற எமது முயற்சித் திட்டமும் இதனுடன் இணங்குவதாக அமைந்தது” என்றார்.

வடதுருவத்தில் ஆரம்பித்து தென்துருவத்தில் முடிவடையும் வகையில் உலகளாவிய ரீதியில் உள்ள எமது பணியாளர்களை இணைத்துக் கொண்டு Pole2Pole கொடியைக் கொண்டு செல்வதன் ஊடாக காலநிலைப் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்பதைக் காண்பிப்பதே DHL Pole 2 Pole இன் நோக்கமாகும். இந்த சவாலின் இறுதியில் இலங்கை உள்ளடங்கலாக 100 நாடுகளின் ஊடாக இந்தக் கொடி பயணித்திருக்கும். அத்துடன், இது சூழல் பாதுகாப்புத் தொடர்பான சர்வதேச பேணுகைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை நிதியாகச் சேகரிப்பதற்கான தளமாகவும் அமைகிறது. இதன் ஒரு கட்டமாக DHL பணியாளர்கள் சுமார் 100,000 மரக்கன்றுகளை உலகம் முழுவதிலும் நடவுள்ளனர்.

2025ற்கான குழுமத்தின் மூலோபாயத்துடன் இணங்கும் வகையில் சுற்றாடல், சமூக மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை நோக்கிய தெளிவான இலக்கைக் கொண்ட Deutsche Post DHL Group நிறுவனத்தின் நிலைபேறான வழிகாட்டலுக்கும் இது ஒத்துழைப்பு வழங்குகிறது. ‘மக்களை இணைத்தல் மற்றும் வாழ்க்கையை முன்னேற்றுதல்’ என்ற நோக்கத்துடன் அதன் நிலைபேறான திட்டங்கள் மூலம் செயற்படுத்தும் நிறுவனம் என்ற ரீதியில், DHL ஆனது GO திட்டங்கள் மூலம் சமூகங்களுக்கிடையில் தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. GoGreen என்பது சுற்றாடலைப் பாதுகாப்பதை நோக்காகக் கொண்டது, GoHelp என்பது பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான போக்குவரத்து ஒத்துழைப்புக்கள் மற்றும் நிபுணத்துவ சேவைகளை தமது ஊழியர்க;டாக வழங்குவது, சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது GoTrade, GoTeach என்பது பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் திறன்சார் பயிற்சிக்கான வாய்ப்புக்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.