Back to Top

சீனாவிடம் இருந்து டீசல் நன்கொடையாக

சீனாவிடம் இருந்து டீசல் நன்கொடையாக

November 25, 2022  12:24 pm

Bookmark and Share
சீனாவின் நன்கொடையான ஒரு தொகை டீசலை ஏற்றி வந்த "சூப்பர் ஈஸ்டன்" என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து இந்நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

அந்த கப்பலில் இருந்து 9,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்நாட்டு விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவினால் டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் நாளை (26) கொழும்பை வந்தடைய உள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.